சினிமா விடுகதை!

ர்விந்த் சுவாமியின் படங்கள்தான் இந்த வார சினிமா விடுகதைகளின் விடைகள் பாஸ்..!

1. இரண்டு சூப்பர்கள் நடிச்ச படத்தில் சுண்டுவிரலா வந்தாரு... யாருடா இந்த அமுல் பேபினு அப்பவே சொல்ல வெச்சாரு. `சின்னத்தாயி' பெத்தப் புள்ளையில் ஒண்ணு ஆபீஸர். இன்னொண்ணு வெட்டி ஆபீஸர். என்ன படம் பாஸ்?

2. குழந்தையைத் தூங்க வைக்கத் தேவைப்படும் ஒண்ணு. கிராமத்து மீசையில ஒட்டுச்சே மண்ணு! ரெண்டு ஜோடி இருந்தும் படம்  `மெதுவா தந்தி' அடிச்சு பந்தி முடியறதுக்குல்ள காணாமப் போச்சே!

3.   `திரும்பவும்' வந்த `நிழல்கள்'  படம். தாடி வெச்ச அர்விந்த் சுவாமியை இதுலதான் பார்த்தோம். கையில கிடாரும் வாயில் எஸ்.பி.பியுமா வந்த அந்தப் படம் என்ன படம் பாஸ்?

4. நான்கெழுத்து நகரத்துப் படம் உலகம் பூரா விருதுகளைக் குவிச்ச படம்.  `ஹம்மா'னு சொன்னா கண்டுபிடிப்பீங்க மக்கா!

5. காதலுக்கு தூதுவிட்டா இப்படியாகும்னு `ஷாக்' கொடுத்த படம்.  ரொமான்டிக் தாமஸ், ஃபாதர் தாமஸான தமாசுப் படம்! இசைப்புயலின் இசைக்கு தேசிய விருது கிடைச்ச இந்தப் படத்துல மூன்றெழுத்து நாயகி பாஸ்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்