கலக்குறாரே!

ஃபேஸ்புக் பிரபலம் ஆவது எப்படி? என இவரைப் பார்த்துக் கத்துக்கலாம். மனிதர் செய்வதெல்லாம் மரண காமெடி!

தாய்லாந்தில் வசிக்கும் அனுச்சா சங்க்சார்ட் சமூக வலைதளத்தில் அவ்வளவு பிரபலம். ஏன், எதற்கு, எப்படி? என ஆராய்ந்தால் அதிரும் அட்ராசிட்டிகள் வரிசைகட்டுகின்றன.

பாங்காங் நகரில் முதியோர் காப்பாளராகப் பணிபுரியும் இவர், கிடைக்கும் கேப்பில் வெட்டிய கிடாதான், ‘லோகாஸ்ட்-காஸ்பிளே’ என்ற ஃபேஸ்புக் பக்கம். பாப்புலரான அனிமேஷன் கேரக்டர்கள், சூப்பர் ஹீரோக்களின் ‘ஆக்‌ஷன்’ ரியாக்‌ஷன், பிரபலமான ஹாலிவுட் படங்களின் போஸ்டர் டிசைன்கள்... எனக் கண்ணில்பட்ட அத்தனை விஷயங்களையும் இமிடேட் செய்து போஸ் கொடுக்கிறார், த்ரூபமாக. அட, பெரிய காஸ்ட்யூம் டிசைனராக இருப்பாரோ என நினைத்தால், அதுதான் தவறு. வீட்டில் இருக்கும் பழைய ஈயம் பித்தளைகள், பிளாஸ்டிக் பொருட்கள், பொட்டு, பவுடர்... இவைதான் ‘இமிடேட்’ செய்யும் அத்தனைக்குமான மூலப்பொருட்கள். பயன்படுத்தும் பொருட்கள்தான் சிறியதே தவிர, ஜாக்கிசானின் ஒண்ணுவிட்ட சித்தப்பா பையனாகக் காட்சியளிக்கும் அனுச்சாவின் அட்ராசிட்டிகள் பெருசோ பெருசு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்