சுட்ட படம்

ஞானப்பழம்

ந்த வார சுட்ட படம் சமீபத்தில் வெளியாகி சுமாராக ஓடிய ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் ரிலீஸான ‘பென்சில்’. இது 2009-ல் ரிலீஸான ‘4th Period Mystery’ என்ற தென் கொரிய த்ரில்லர் சினிமாவின் காப்பியேதான்! வாங்க ஒரிஜினல் டு டூப்ளிகேட் மேக்கிங் பார்ப்போம்!

ஜூங் ஹூன் நன்கு படிக்கக் கூடிய பள்ளி மாணவன். பள்ளியில் அவனுக்கும் தேக்யூ என்பவனுக்கும் ஆகவே ஆகாது. வகுப்பறையிலும் வெளியிலும் எப்போதும் சண்டையிட்டுக் கொள்வார்கள். ஜூங் ஹூனை அடிப்பதும் மனரீதியாக துன்புறுத்து வதையும் வாடிக்கையாக வைத்திருப்பவன்தான் இந்த தேக்யூ. ஒருநாள் இருவரும் சண்டையிடும்போது கத்தியைக் காட்டி தேக்யூ, ஜூங் ஹூனை மிரட்டுகிறான். அதை இன்னொரு மாணவி பார்த்துவிடுகிறாள். பிறகு சண்டையிட்ட இருவரும் விலகிச் சென்றுவிடுகிறார்கள். 4-வது பீரியடில் வகுப்பறைக்கு வருகிறான் ஜூங் ஹூன். அங்கே தேக்யூ கத்தியால் குத்தப்பட்டுக் கிடக்கிறான். அருகில் கிடக்கும் ரத்தம் தோய்ந்த கத்தியை எடுத்துப் பார்க்கிறான் ஜூங் ஹூன். அந்த நேரம் அங்கு வரும் பக்கத்து பெஞ்ச் மாணவி டா ஜுங் பார்த்து ஷாக் ஆகிறாள். ஜூங் ஹூனைக் குற்றவாளியாக நினைத்துவிடுகிறாள். தான் நிரபராதி எனப் புலம்பும் ஜூங்குக்கு அடுத்த பீரியடுக்குள், மாணவர்கள் வருவதற்குள், பிணத்தை எல்லோரும் பார்த்து விடுவதற்குள் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடித்துக் கொடு என நிபந்தனை விதிக்கிறாள். அவர்கள் இருவரும் சேர்ந்து 40 நிமிடத்திற்குள் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்தார்களா? யார் யாரெல்லாம் அவர்களின் சந்தேகப் பார்வையில் வந்து போகிறார்கள் என்பதே மீதி பரபர ரேஸ் சேஸ் கதை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்