“வெறும் விளம்பரம் வேஸ்ட்!”

‘டேமிட்’ எனும் வசனத்தை சிவாஜிக்குப் பிறகு அதிகமுறை பேசிய சாதனைக்குச் சொந்தக்காரரான ‘லொள்ளுசபா’ சுவாமிநாதனை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினேன்.

“கும்பகோணம் பக்கத்தில் ஒரு கிராமத்தில் இருந்து சென்னை வந்து அடையாறு ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல ஆக்டிங் கோர்ஸ் சேர்ந்தேன். முதலில் ரெண்டு வருச டிப்ளமோ கோர்ஸாக இருந்து நான் சேர்ந்ததுக்குப் பிறகு ஒரு வருச சர்டிஃபிகேட் கோர்ஸா மாத்திட்டாங்க. டிப்ளமோ படிச்சிருந்தாலாவது தூர்தர்ஷன்ல ஏதாவது வேலைக்குப் போயிருக்கலாம். அதை மைனஸ்னு சொல்ல முடியாது. ப்ளஸ்தான். ஏன்னா அதே வேலையிலே  காலத்தைத் தள்ளியிருப்பேன். சில வாய்ப்புகள் கிடைச்சும் நான் சரியாப் பயன்படுத்திக்கலைன்னுதான் சொல்லணும். ‘ஒருதலை ராகம்’ படத்துல நடிக்கக் கூப்பிடும்போது படிச்சுக்கிட்டு இருந்தேன். ‘மலையூர் மம்பட்டியான்’ படத்துல செந்தில் கேரக்டர் பண்றதுக்காக ராஜசேகர் சார் கூப்பிட்டப்போ வெளியூருக்குப் போய்ட்டேன். அப்போ இப்போ மாதிரி தொடர்புக்கான வசதிகள் இல்லாததனால அந்த வாய்ப்பு தவறிடுச்சு. நாடகக்குழுவில் அஞ்சு வருசம் இருந்தேன். அதனாலேயோ என்னவோ சினிமாவில் ஓரிரு காட்சிகளில் வந்தாலும் ஓவர் ஆக்டிங்கா இருக்குனு ரிஜெக்ட் பண்ணிட்டாங்க. சினிமாவை விட அப்போ மேடைகளில் நடிக்கிறது ரொம்பப் பிடிச்சுருந் துச்சு. நாடகத்தில் மூணுமணி நேரத்துக்கு வசனங்களை ஞாபகம் வெச்சு நடிக்கணும்ங்கிற பிரச்னை இருந்தாலும், நடிச்சு முடிச்சதுமே ரசிகர்களின் பாராட்டுகளை வாங்கிடலாம்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்