சினிமால்

* சமீபத்தில் தன்னுடைய விடுமுறையை வெளிநாடுகளில் கோலாகலமாகக் கொண்டாடிய ஏமி ஜாக்ஸன் மீண்டும் இந்தியா திரும்பியிருக்கிறார். அப்போது ரஜினியுடன் நடித்த அனுபவத்தை மகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். ரஜினி சார் என்னை எப்போதும் ஜூனியர் ஐஸ்வர்யா ராய் என்றே அழைப்பார். அது எனக்கு ரொம்பவே பெருமையான விஷயம் எனக் கூறும் ஏமி, தற்போது நடித்து வரும் ஒரு இந்திப் படத்துக்காக உருது மொழியையும் கற்று வருகிறார். நீங்க நல்லா வருவீங்க!

மணிரத்னத்தின் உதவியாளரும் ‘டேவிட்’ படத்தின் இயக்குநருமான பிஜாய் நம்பியார் மணிரத்னத்தின் கிளாசிக் ஆக்‌ஷன் படமான ‘அக்னி நட்சத்திரம்’ படத்தை இந்தியில் இயக்கியே தீருவது என்ற முடிவில் இருக்கிறார். அதில் கார்த்திக் நடித்த ரோலில் நடிக்க தனுஷைக் கேட்டிருக்கிறாராம். தனுஷ் இந்தியில் பரிச்சயமான முகம் என்பதாலும், அதை அப்படியே தமிழிலும் டப் செய்து வெளியிடலாம் எனவும் கணக்குப் போட்டிருக்கிறாராம். நல்லாதான் பிளான் போடுறீங்க!

ஜாக்கி ஷெராஃப்பின் மகன் டைகர் ஷெராஃப் மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்று வைத்தது அவருக்கு நன்றாகவே கைகொடுத்து வருகிறது. ரெமோ டிசெளசா இயக்கத்தில் ஒரு சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்கும் டைகருக்கு இந்தப் படம் மிகப்பெரிய ஆக்‌ஷன் ஸ்பெஷலாக அமையுமாம். வில்லனாக ‘பூலோகம்’ படத்தில் நடித்த வெள்ளைக்கார ‘நாதன் ஜோன்ஸ்’ நடிக்கிறாராம். தமிழில் நடித்ததைப் பார்த்த ரெமோ, அப்படியே இந்திக்கு அழைத்துப் போய்விட்டார். கிளாமருக்கு நாயகியாக ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸும் இருக்கிறார். எந்தப் பேரும் வாயில் நுழையலையே சாமி!

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளரான பிரேம் குமார் விஜய் சேதுபதியின் நெருங்கிய நண்பராம். அப்போதே விஜய் சேதுபதியிடம் கதை சொல்லி வைத்திருந்தாராம். தற்போது பல படங்களில் நடித்துவரும் சேதுபதி, மற்ற வேலைகளை ஆரம்பி, நான் கால்ஷீட் தருகிறேன் என்று கூறி விட்டாராம். இந்த ஆண்டு இறுதியில் படம் தொடங்கும் என்கிறார்கள். டைட்டில் என்னாச்சி தானே?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்