கபாலி மசாலா!

‘கபாலி’ படம் பார்த்தவர்களில் சிலர் ‘என்னப்பா இது ஒரு காமெடி இல்லை, ஃபைட் இல்லை. ரஜினி படம் மாதிரியே இல்லையேப்பா...’ என நொந்து வெந்து போனார்கள். அவர்களுக்காகவே கபாலியில் கொஞ்சம் மசாலாவைத் தூவி வேகவைச்சு இங்கே இறக்கியிருக்கேன். இதைப் படிச்சும் நொந்து போனீங்கனா நான் பொறுப்பு கிடையாது. இதயம் பலவீனமானவர்கள் படிக்க வேண்டாம்...

படத்தின் முதல் காட்சி, மலேஷியாவில் உள்ள ஒரு சிறையில் ஒரு போலீஸ் தனது லத்தியால் கதவுகளைத் தட்டியபடி செல்கிறார். எல்லாக் கதவிலும் ‘டொய்ங்... டொய்ங்...’ எனத் தட்டியவர், ஒரு சிறையின் கதவை மட்டும் தட்டாமல் நிற்கிறார். கேமரா சிறைக்குள் நகர்கிறது, உள்ளே ரஜினி ‘மகா அவதார் பாபாஜி’ என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறார். படிக்கும்போது அவரைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காகவே கதவைத் தட்டாமல் ஒண்ணேகால் மணி நேரம் கால் கடுக்க நிற்கிறார் அந்த போலீஸ். தன்னைக் கொசு கடித்த கேப்பில் அவரைப் பார்த்துவிடும் ரஜினி, அந்த போலீஸை உள்ளே வரச் சொல்கிறார். உள்ளே வரும் போலீஸ் ரஜினியின் வலது புறங்கையைத் தூக்கி முத்தம் கொடுத்துவிட்டு ‘இன்னைக்கு நீங்க ரிலீஸ்...’ என்கிறார். சிரித்துக்கொண்டே புத்தகத்தை இறக்கி தன் முகத்தைக் காட்டி ‘மகிழ்ச்சி’ என்கிறார் ரஜினி. இதுதான் இன்ட்ரோ, தியேட்டர் கூரையவே பறக்கவிடுறோம். அப்போது நாற்காலியில் இருந்து எழும் ரஜினி தன் கையை முறுக்கி சுவற்றில் ஒரு குத்துவிடுகிறார். பக்கத்து சிறை தெரிவதுபோல் ஓட்டையே விழுந்து விடுகிறது. அப்போது அந்த போலீஸ் ‘வாவ் வாட் எ மேன்... உங்களுக்கு வயசாகலை...’ என்கிறார். கட் பண்ணினால் ஓப்பனிங் சாங். ஒரு குடியிருப்பு பகுதியில், ரங்கோலி போட்ட தப்பட்டைகளைத் தாங்கிய நூறு குரூப் டான்ஸர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களை நோக்கி ஒரு சிங்கம் செம வேகத்தில் ஓடிவருகிறது. ஆனால், டான்ஸர்களோ பயப்படாமல் சந்தோஷமாக அதை வரவேற்றுக்கொண்டிருக்கிறார்கள். அந்த சிங்கம் அப்படியே பாய அது ரஜினியாக உருமாறிவிடுகிறது. அப்புறம் நாலு நிமிஷம் நாக்கு தள்ள டான்ஸ். ‘உலகம் உலகம் ஒருவனுக்கா...’ என எஸ்.பி.பி தன் குரலால் குளுகோஸ் ஏற்றுகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்