அகராதிடா!

‘கபாலி’ படம் பார்த்த பல பேர், வசனங்களில் வரும் சில வார்த்தைகளைக் கேட்டு என்ன அர்த்தம்னு தெரியாமல் ‘திறுதிறு’னு முழிச்சுருப்பீங்க. அது அம்புட்டும் மலேசியத் தமிழர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள். அந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தைகளோடு மேலும் சில வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் இங்கே கொடுத்திருக்கேன். தெரிஞ்சுக்கோங்கலா...

சரக்கு -     அழகான பெண்

கத்தி சரக்கு - மிக அழகான பெண்

கெபாக் -     நடனம்

ஜகட் -     கேங்க்ஸ்டர்

சாவடி -     ஈர்க்கக்கூடிய / செம்ம

பொன்ன -     ரொம்ப

பங் -     பிரதர்

ஜலன் -     குழு

ஆமாவா -     அப்படியா?

டெருக்குவா -     மோசமா

ஜாடி ஆகலை - வெற்றியடையவில்லை

சப்பி -     முட்டாள்

வெடிப்போம் -     சைலன்டா எஸ்கேப் ஆகிடுவோம்

தொங்குதல் -     கடலை போடுதல்

காடி -     கார்

குறப்பு, லான்சி, ஸ்லாக்கு -  தைரியமான / திமிர்பிடித்த

கட்டை -     துப்பாக்கி

மாத்திரை -     போதைப்பொருள்

கென்சிங் -     காட்டிக்கொடுத்தல்

பாப்பா -     கேங் லீடர்

கோழிக்கறி -     விருந்து

பேப்பர் -     பணம்

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்