ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

திடீர்னு ஒரு பிரபலத்தைப் பார்த்துட்டா, பக்கத்தில் இருக்கிற யார்கிட்டேயாவது மொபைலைக் கொடுத்து, ‘ஒரு போட்டோ எடுத்துக்கொடுங்க’னு நெளிஞ்சுக்கிட்டு நிற்போம். இதில் என்ன பாஸ் இருக்கு? மொபைல்ல படம் எடுக்கணும்னா இப்படித்தானேன்னு கேட்காதீங்க. காலம் காலமாக விரலை வைத்து ‘க்ளிக்’ செய்தே படம் பிடிக்கப் பழகிவிட்ட நமக்குக் கொஞ்சம் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கவே ‘அல்கோம்ரா’ என்ற ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் உலவுகிறது. ‘பாஸ்போர்ட்’ போட்டோ எடுத்தாலும், வித்தியாசமாக எடுக்க வேண்டும் என நினைக்கும் வித்தியாச விரும்பிகளுக்கு இந்த அப்ளிகேஷன் எக்ஸ்ட்ரா எனர்ஜி கொடுக்கும்! அப்படி என்ன இருக்கு?

அப்ளிகேஷனை டவுன்லோடு செய்யுங்கள். அப்ளிகேஷனின் செட்டிங் பகுதியில்தான் நீங்க இறக்கவேண்டிய அத்தனை வித்தைகளும் இருக்கும். ஒரு புகைப்படம் எடுக்க எவ்வளவு நொடிகள் அல்லது எவ்வளவு நிமிடம் தாமதிக்க வேண்டும் என்று தேர்ந்தெடுத்துக்கொண்டால், எந்த இடத்திலும் உங்களை நீங்களே படம் எடுத்துக்கொண்டு சுயம்புவாகச் சுற்றித் திரியலாம். 125 மீட்டருக்கு அந்தப் பக்கம் மொபைலை வெச்சுட்டு நான் எப்படி ‘க்ளிக்’ பண்ணுவேன்னு கன்ஃபியூஸ் ஆகாதீங்க. அப்ளிகேஷனில் இருக்கும் ‘வாய்ஸ்’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்துகொண்டால், ‘ஸ்மைல் ப்ளீஸ்’, ‘ஓகே சீஸ்’ என்று பேசினாலே போதும். அதைக் கட்டளையாக எடுத்துக்கொண்டு, தானாகவே க்ளிக்கிவிடும். ‘அட’னு ஆச்சரியம் ஆகிடாதீங்க. விசில் அடித்தாலே ‘க்ளிக்’ செய்யும் ஆப்ஷனும் இதில் அடக்கம். ஆக, செல்ஃபி எடுக்கும்போது ‘க்ளிக்’ பட்டன் எங்கே இருக்குனு திணறாமல், ஒரே ஒரு விசில் அடித்தால் போதும். செல்ஃபி ரெடி! இதுமட்டுமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்