தம்பிக்கு ஊரு குஜராத்!

நம் ஊரில் பரீட்சை முடிஞ்சு ஸ்கூலுக்கு ஒரு மாசம் லீவ் விட்டா, சொந்தக்காரங்க வீட்டுக்கு அனுப்பி வெச்சிட்டு பெருமூச்சு விடுவாங்க. இல்லாட்டி கோச்சிங் க்ளாஸ் அனுப்புவாங்க. ஆனா குஜராத்ல ஒரு கோடீஸ்வரர் தன்னோட பையனை என்னவெல்லாம் பண்ணிருக்கார் பாருங்க!

6,000 கோடிக்கு மேல சொத்து இருக்கிற, ஹரே கிருஷ்ணா என்ற நிறுவனம் மூலம், வைரத்தைப் பட்டைதீட்டி 70 நாடுகளுக்கும் மேல் ஏற்றுமதி செய்பவர் சாவ்ஜி தொலாக்கியா. கடந்த சில வருடங்களாகத் தீபாவளி போனஸாகத் தன்னுடைய தொழிலாளர்களுக்கு கார், வைர நகை மற்றும் அபார்ட்மென்ட்டினைப் பரிசளித்து யாருய்யா இவர்னு மொத்த உலகத்தையும் திரும்பிப் பார்க்க வெச்சவர் இவர். அமெரிக்காவில் எம்.பி.ஏ. படிச்சிட்டு இருந்த இவரோட மகன் திரவியா தொலாக்கியா லீவுக்கு இந்தியாவுக்கு வந்திருக்கார். சில கண்டிஷன்களையும், கையில் 7,000 ரூபாயையும் தந்து ‘வீட்டைவிட்டு வெளியே போய் ஒரு மாசம் இருந்துவிட்டு வா’ என்று அனுப்பி வைத்துவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்