ஷாக்கிங் ஸ்பெஷல் - டப்பாவுக்குள் இருக்கிறோமோ?

ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங். உலகப் புகழ்பெற்ற பெயர். இவர் ஒரு கோட்பாட்டு இயற்பியலாளர். குணப்படுத்த முடியாத ஒருவித நரம்பு நோயால் பாதிக்கப்பட்டு பேச்சையும், கை, கால் உடல் இயக்கங்களை இழந்தபோதும் அண்டவியல், குவாண்டம் ஈர்ப்பு போன்ற துறைகளில் நிறைய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். பிளாக் ஹோல் (கருங்குழி), ஏலியன்கள், டைம் ட்ராவல் என இவர் சொல்லும் கருத்துகளைக் கொண்டுதான் பல ஹாலிவுட் படங்கள் உருவாகியுள்ளன. உருவாகிக்கொண்டிருக்கின்றன. அவர் உதிர்த்த சில ஆச்சரிய கூற்றுகள் மற்றும் கேள்விகளில் சில...
 
*    டைம் ட்ராவல் செய்ய ஒளியை விட வேகமாக செல்லும் ஸ்பேஷ் ஷிப்பில் பயணிக்க வேண்டும். அந்த ஸ்பேஷ் ஷிப்பில் நாம் ஒருநாள் இருக்கும் நேரத்தில் பூமியில் ஒரு வருடம் ஆகிவிடும்.

*     அதேபோல் காலப்பயணம் என்பது நிகழ்காலத்தில் இருந்து எதிர்காலத்திற்கு செல்வது மட்டுமே சாத்தியம். கடந்த காலத்துக்கு காலப்பயணம் செய்யவே முடியாது. அதுவும் சாத்தியமெனில், எதிர்காலத்தில் இருந்து நம்மை யாராவது காண வந்திருக்க வேண்டுமே?

*     மனிதர்களாகிய நாம் இந்தப் பிரபஞ்சத்தில் ஏலியன்களைத் தேடவும், தொடர்புகொள்ளவும் முயற்சிப்பது மிகவும் ஆபத்தானது. ஏலியன்கள் நம் பூமிக்கு வந்தால், ஆபத்து அவர்களுக்கு அல்ல; நமக்குத்தான்.

*     இன்னும் ஆயிரம் வருடங்களுக்குள் மனித இனம் என்ற ஓர் இனம் இருக்கவே இருக்காது.

*    அதிலிருந்து ஒளிகூட தப்ப முடியாது என்பதால்தான் அதற்கு ‘பிளாக் ஹோல்’ (கருங்குழி) என அறிஞர்கள் பெயரிட்டனர். ஆனால், பிளாக் ஹோலில் இருந்து துகள்கள் வெளியேறுகின்றன. பிளாக் ஹோலில் இருந்து தப்பிக்க வழி உள்ளது, அந்த வழி நம்மை வேறு ஒரு பிரபஞ்சத்துக்கு இட்டுச் செல்லும்.

*     இந்தப் பிரபஞ்சம் இருப்பது மூடப்பட்ட டப்பாவினுள்.

*    எதிர்த்துகள்களால் ஆன எதிர் உலகமும், எதிர் மக்களும் இங்கே (பிரபஞ்சத்தில்) இருக்கலாம். உங்களுக்கு நேர் எதிரான ஒருவரை ஒருவேளை நீங்கள் சந்தித்தால் அவரிடம் தயவுசெய்து கை குலுக்காதீர்கள். இல்லையேல், நீங்கள் இருவரும் பேரொளியாக மாறி மறைந்தே போவீர்கள்.

*    பிரபஞ்சத்தை உருவாக்குவதற்கு முன்பு கடவுள் என்ன செய்துகொண்டிருந்தார்?

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்