ஷாக்கிங் ஸ்பெஷல் - பேய் இருக்கா இல்லையா?

தொடர்ந்து பேய்ப்படங்களாக வந்துகொண்டிருப்பதாலோ என்னவோ, பேய் அமுக்கிடுச்சு, என்னைத் துரத்திக்கிட்டே இருக்குனு சிலர் அல்லு தெறிப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் அறிவியலிலோ இதெற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள்.

வேப்பமரம் அல்லது புளியமரத்தின் கீழ் உறங்கினால் முனி பிடித்து மூச்சை அடைக்கும் என்ற மூடநம்பிக்கையை அறிவியல் தகர்த்துவிட்டது. பகலில் ஆக்ஸிஜனை வெளியில் விடும் மரங்கள் இரவில் நேர்மாறாக கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுகிறது. இந்த நேரத்தில் மரத்தின் கீழ் உறங்கும்போது ஆக்ஸிஜன் குறைவால் ஏற்படும் மூச்சுத்திணறலைத்தான் முனியோடு கோத்துவிட்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த அனுபவத்தை உணர்ந்திருப்பான். அதாவது, ஆழ்ந்த உறக்கத்தில் திடீரென நெஞ்சு வலிக்கும் உணர்வு எழும். ஆனால், எழுந்திருக்கவோ அல்லது உடல் பாகங்களை அசைக்கவோ முடியாது. அமுக்கினி பேய் என்னை அமுக்கிடுச்சு என்று அலறியிருப்பார்கள். ஆனால் அறிவியலோ  இதை ‘ஸ்லீப் பேரலிசிஸ்’ (தூக்க வாதம்) என்கிறது. அதாவது முறையற்ற தூக்கம், மன அழுத்தம், மெலடோனின் குறைபாடு எனப் பல காரணங்களால் ஆழ்ந்த தூக்கத்திற்கும் விழித்திருக்கும் நிலைக்கும் இடைப்பட்ட நிலையில் இந்த உணர்வு தோன்றுகிறது என்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்