ஷாக்கிங் ஸ்பெஷல் - கப்பா தெரியுமா?

ப்பானிய நாட்டுப்புறக் கதைகளில் நீர் கடவுள், ஆற்றுக் குழந்தை, நீர்ப்புலி எனப் பலவிதமாக அழைக்கப்படுகிறது ‘கப்பா’. இன்றளவும் ஜப்பான் முழுவதும் கப்பா வாழ்வதாக நம்பப்படுகிறது. குறிப்பாக வடமேற்குப் பகுதியில் உள்ள கியூஷூ தீவில் அவ்வப்போது மனிதர்களின் பார்வையில் தென்பட்டதாகக் கூறப்படுகிறது. கோடை மற்றும் வசந்த காலங்களில் நீரிலும், மற்ற காலங்களில் மலைகளிலும் இது வாழ்வதாகக் கருதப்படுகிறது. இது பார்ப்பதற்கு மனிதனைப் போன்ற தோற்றம் கொண்டிருந்தாலும் இதன் முதுகுப்பகுதியில் ஆமை ஓடு போன்ற பகுதியும், அலகும் கொண்டதாக ஜப்பானியக் கதைகள் சித்தரிக்கின்றன. நீரை விட்டு நிலத்திற்கு வரும்போது இதன் உச்சந்தலையில் உள்ள பள்ளத்தில் எப்போதும் நீர் நிரம்பியிருக்க வேண்டுமாம். அந்த நீர்தான் இதன் அசாத்திய சக்திக்குக் காரணமெனக் கருதப்படுகிறது. அப்படி அந்த நீர் வழிந்துவிட்டால் இதன் சக்தி குறைந்து இறந்துவிடும் எனவும் நம்பப்படுகிறது. சில இடங்களில் இவை குழந்தைகளையும், விலங்குகளையும் நீரில் அமிழ்த்தி கொன்றுவிடுவதாகவும் கதைகள் உள்ளன. இன்றும் குழந்தைகள் நீர்நிலைகளில் கவனமின்றி இறங்கிவிடக் கூடாது என்பதற்காக, கப்பா எச்சரிக்கைப் படங்கள் நீர்நிலைகளுக்கு அருகே வைக்கப்படுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்