சுட்ட படம்

ஞானப்பழம்

ந்த வார சுட்ட படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1985-ல் ரிலீஸான ‘நான் சிகப்பு மனிதன்’. ரஜினிகாந்த்துடன் பாக்யராஜ், சத்யராஜ், அம்பிகா நடித்த இந்தப் படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி இருந்தார். இந்தப் படம் 1974-ல் ஹாலிவுட்டில் சார்லஸ் பிராஸ்னன் நடிப்பில் ரிலீஸாகி ஹிட்டடித்த ‘டெத் விஷ்’ என்ற படத்தின் அப்பட்டமான தழுவல்!

ஒரிஜினல் ‘டெத் விஷ்’ படத்தின் கதையைப் பார்ப்போமா?

ஹீரோ பால், மன்ஹாட்டன் நகரில் இருக்கும் கட்டடக் கலை நிபுணன். மனைவி ஜோனா, மகள் கரோலுடன் நிம்மதியாய் வாழ்ந்து வருபவன். பால் வீட்டில் இல்லாதபோது மூன்று ரௌடிகள் பாலின் மனைவி மற்றும் மகளை வல்லுறவுக்கு முயற்சி செய்து தாக்குகிறார்கள். இதில் பாலின் மனைவி ஜோனா இறந்து விடுகிறாள். மனம் நொந்துபோய் இருக்கும் பாலுக்கு மனதைத் திசை திருப்ப வேண்டி வேறொரு அசைன்மென்ட் கொடுத்து வெளியூருக்கு அனுப்புகிறார் அவனது பாஸ். அரிசோனாவில் இருக்கும் டஸ்கன் நகருக்குப் போகும் பால் அங்கு ஓர் இடத்தில் துப்பாக்கி சுடும் கிளப்பில் மிகத் துல்லியமாகச் சுட்டு பலரின் கவனத்தை ஈர்க்கிறான். அமீஸ் என்ற அவனது பாஸின் நண்பர் அவன் திறமையைக் கண்டு வியக்கிறார். அவரிடம் பால், தான் கொரியப் போரின்போது மருத்துவ உதவியாளனாய்ப் போர்முனைக்குச் சென்ற அனுபவத்தையும் அப்போது பழகிய துப்பாக்கிச் சுடும் பயிற்சி பற்றியும் சொல்கிறான். ஈர்க்கப்பட்ட அமீஸ் அவனுக்கு ஓர் அழகான கையடக்கத் துப்பாக்கி ஒன்றைப் பரிசளிக்கிறார். அதை வாங்கிக்கொண்டு மன்ஹாட்டன் நகருக்குத் திரும்புகிறான் பால்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick