ஜெயலலிதாவிடம் 10 கேள்விகள்

ருணாநிதியிடம் மட்டும் பத்து கேள்விகள் கேட்டு ‘டைம்பாஸ்’ பண்ணினா நியாயமா இருக்குமா? இதோ, ‘ஜெயலலிதாவிடம் 10 கேள்விகள்’ கேட்கிறார், சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன்!

1. உங்கள் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட ஏற்றம், இறக்கம் இரண்டையும் நான் பார்த்திருக்கிறேன். ஆனாலும், தாங்கள் எந்நிலையிலும் தன்னிலை இழக்காமல், நம்பிக்கையோடு இருக்கிறீர்கள். அது எப்படி?

2. உங்களை வைத்துக்கொண்டு மேடைகளிலும், சட்டமன்றத்திலும், சட்டமன்றத்திலோ நீங்கள் இல்லாதபோதும் உங்கள் கட்சிக்காரர்கள் சகட்டுமேனிக்கு உங்களைப் புகழோ புகழென்று ஆண்டுக்கணக்காகப் புகழ்ந்து வருகிறார்கள். தங்களுக்கு அந்த முகஸ்துதியின் மீது அலுப்பு தட்டியதே இல்லையா?

3. ‘எதிர்க்கட்சி இருந்தால்தான், அது ஜனநாயகம். இல்லாவிட்டால், அது சர்வாதிகாரம்’ என்பார்கள். தாங்களும், தங்கள் கட்சிக்காரர்கள் எல்லோரும், எதிர்க்கட்சியினரை ‘எதிரி’ கட்சியாகவே பார்க்கிறீர்களே... அது ஏன்?

4. அரசு விழாக்கள், சட்டமன்றம் மற்றும் பொதுநிகழ்ச்சிகளில் தாங்கள் கலந்துகொள்ளும்போது, மாற்றுக்கட்சியினரோடும், பொதுமக்களோடும் கலகலப்பாகப் பேசி, மகிழ்ச்சியோடு இல்லாமல், ஒருவிதமான இறுக்கத்தோடு இருப்பது ஏன்?

5. சட்டமன்றம் என்பது ஜனநாயக அரசியலில் மிக உயர்ந்த இடம். தாங்களோ, முதல்வர். சட்டமன்றம் நடைபெறும் நாட்களில் சட்டமன்றத்திற்குக் கூடிய மட்டும் தவறாமல் வருவது, கேள்வி நேரத்தில் கேள்விகளுக்குப் பதில் அளிப்பது, சட்டமன்ற விவாதங்களில் கலந்துகொள்வது ஒரு முதலமைச்சருக்கு உரிய கடமைகள் ஆகும். பெரும்பாலும், இவைகளைத் தாங்கள் தவிர்ப்பது ஏன்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick