மோடிக்குக் கேள்வி... தமிழிசைக்குப் பதில்!

‘அரசியல் ஸ்பெஷல்’னா குஷ்பு பேட்டி இல்லாமலா? காங்கிரஸின் கலர்ஃபுல் முகமான குஷ்புவிடம் ஒரு ‘டி20’ பேட்டி!

‘‘அரசியல் ஆர்வம் எப்போ வந்தது?’’

‘‘2007. எப்போ பார்த்தாலும் ‘அரசியல்ல இவர் சரியில்லை, அவர் சரியில்லை'னு பேசிக்கிட்டு இருக்கோம். நாம என்ன செஞ்சிருக்கோம்னு யோசிச்சுப் பார்த்தேன். அரசியலுக்கு வந்துட்டேன்!’’

‘‘பிடித்த அரசியல் வாசகம்?’’

‘‘ ‘நீ காணவிரும்பும் மாற்றம் முதலில் உன்னிடத்தில் இருந்தே தொடங்கட்டும்'னு மகாத்மா காந்தி சொன்ன வரிகள்!’’

‘‘காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு இப்போதைய தேவை என்ன?’’

‘‘சோனியா காந்தி கட்சித் தலைவரா இருக்கும்போது, அப்படி எதுவும் தேவையில்லை. காங்கிரஸ் கட்சி வளர்சியடைந்துதான் இருக்கு!’’

‘‘காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்து, பிடித்த அரசியல் தலைவர் யார்?’’

‘‘வாஜ்பாய்!’’

‘‘அரசியலுக்கு வர்ற பெண்களுக்கு உங்க அட்வைஸ்?’’

‘‘அரசியல் கொஞ்சம் கஷ்டமான வேலைதான். அரசியலில் அர்ப்பணிப்பு உணர்வோட வேலை பார்த்தா, சமூகத்தைக் கொஞ்சம் மாற்றலாம். என்னோட ரெண்டு பொண்ணுங்களும் வளர்ந்துட்டாங்க. அதனால, அவங்களைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. மக்களுக்கு, என்னோட கட்சிக்கு நான் என்ன செய்ய நினைக்கிறேனோ, அதைச் செய்றதுக்கான சுதந்திரம் அரசியல்ல எனக்கு நிறைய இருக்கு!’’

‘‘மறக்க முடியாத மேடை?’’

‘‘ஜீன் 3, 2010. தி.மு.க-வில் நான் சேர்ந்த நேரத்தில், கலைஞர் அவர்களோட பிறந்தநாள் வந்தது. அத்தனைப் பெரிய கூட்டத்துக்கு நடுவே, மிகப்பெரிய மேடையில் என்னை நம்பிப் பேச வாய்ப்பு கொடுத்தார் கலைஞர்!’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick