அரசியல் விடுகதை!

* மூன்று எழுத்து சூரன். முருகனோட பேரன். ஆடு, மாடு மேய்த்தல் அரசுத் தொழில்னு சொன்னாரு. இரண்டு மெழுகுவர்த்திகளோட உருகி நின்னாரு. யாரு இவரு? - யாரென்று தமிழில் தட்டச்சு செய்யவும்!

* மாற்றம் முன்னேற்றம்னு ஆரம்பிச்சாரு. ஏமாற்றமாகி ஏங்கி நின்னாரு. செல்லப்பேரு சின்னய்யா, ஜெயிக்கிற வழியைக் காணோம்யா! - இவர் யாருனு சொல்லுங்கய்யா?

* ரிசல்ட்டைப் பார்த்து வெம்பின இவர், நமக்கு நாமேனு நம்பினார். மீற மாட்டாராம் அப்பா பேச்சை. இவரோட மைண்ட் வாய்ஸ் ‘வட போச்சே!' - இவர் யார்?

* அண்ணியின் கணவர் அண்ணன்.  கருமைநிறக் கண்ணன். கோவம் வந்தா சிவக்கிற கண்ணு. பேச்சுல எத்தனை உளறல்னு எண்ணு! - இவர் யாருனு நீ சொல்லு கண்ணு!

* சோடாவில் இருப்பவர், சோலோவாகத்தான் இருப்பார். அம்மாவுக்கு அடங்கின செல்வப் பிள்ளை, தேனி மக்களின் செல்லப் பிள்ளை! - இந்தப் பிள்ளை எந்தப் பிள்ளை?

மதுரை இவர் கோட்டையாம், அதுல போட்டாங்க ஓட்டையாம்! அதகள அண்ணன் அப்பாவுக்கு வைப்பார் சல்யூட்டு, எப்போ வாருவாரோ ரிப்பீட்டு? - யாரு பாஸ் இவர்?

* கோவை திருப்பிப்போட்டா பேரு, இவர் கூட்டு வைக்காத ஆள் யாரு? நடை, உடை, மேடையில் கைதட்டல் வாங்கினவரு, போகாத ஊருக்கு கூட்டணி வெச்சவரு! - இவர் யாரு?

- ரா.கலைச்செல்வன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick