எனக்குப் பல உண்மைகள் தெரிஞ்சாகணும்!

அரசியலில் இதெல்லாம் சாதாரணம்தான்! ஆனாலும், அப்பப்போ குடைச்சலைக் கொடுத்துக்கிட்டு இருக்கிற சில கேள்விகள் மக்களுக்கு இருக்கத்தானே செய்யும்?

* ‘நானோ என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ கட்சிப் பதவிக்கு வர மாட்டோம்’னு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சொன்னார். கொடுத்த வாக்கைக் கோட்டை விட்டுவிட்டு மகனுக்குப்் பதவி தந்தார். கேள்வி என்னன்னா, ஒரு ஃப்ளோவில் இப்படியெல்லாம் பேசிட்டோம்னு ஃபீல் பண்ணி, கொஞ்ச காலத்துக்குப் பிறகாவது ‘அதெல்லாம் அறியாமல் செய்த பிழை. கட்சியிலும் நாங்கள் இருப்போம். பதவியிலும் உட்காருவோம்’னு ராமதாஸ் எங்கேயாவது சொல்லியிருக்காரா? #சொல்லுங்கண்ணே சொல்லுங்க!

* புளிச்சுப்போன கேள்விதான். ஆனாலும் குடைஞ்சுக்கிட்டு இருக்கே? ‘அழகிரி எப்போதான் தி.மு.க-வுக்குள் திரும்ப வருவார்?’ #மைக்கை அவர்கிட்ட கொடுங்க!

* நாளுக்கு நாலு நாடு சுத்திக்கிட்டு இருக்கார் மோடி. அவர் போடுற ‘கோட்’ ரேட்டைக் கேட்டா கண்ணு கட்டுது. இவர்தான், ‘ஏழைகளின் வங்கிக்கணக்கில் 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும்’னு சொன்னார். பணத்தைக் கணக்குல போடலைனாலும் பரவாயில்லை. கிடப்புல இருக்கிற கருப்புப்பணத்தை எப்போதான் மீட்டுக்கொண்டு வருவீங்க? #ஃபிளைட்டை எங்கேப்பா லேண்ட் பண்ணியிருக்கீங்க?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick