நடக்கும்ல!

ஃபாண்டி பஜார், பர்மா பஜார், சண்டே மார்க்கெட் வியாபாரம்லாம் முடிந்து இப்போதெல்லாம் எங்கும் ஆன்லைன். எதிலும் ஆன்லைன். அப்படி இனி என்னென்ன ஆன்லைன் பிசினஸ் ஆகுமென்று பார்ப்போமா...

காலையில் எழுந்து பல் துலக்க சோம்பலாக இருந்தால், ஆர்டர் போட்டால் போதும். ஆன்லைன் ஆட்கள் வந்து பல் துலக்கிவிட்டுச் செல்வார்கள். நீங்கள் சுகமாக தூங்கிக்கொண்டிருக்கலாம். இதற்குத் தொடர்ந்து ஆர்டர் போட்டால் கேஷ் பேக் ஆஃபர் கொடுப்பார்கள்.

வேலைக்குச் செல்லும்போது வெறும் தயிர்சாதம், புளிசாதம் கொண்டு செல்பவர்கள், காலையில் ஊறுகாயோ, பருப்பு வடையோ ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டுச் சென்றால் மதிய சாப்பாட்டுக்கு வடை வந்துவிடும்.

மேட், லிக்யூட் வைத்தும் வலைபோட்டு மூடியும் போகாத கொசுவை விரட்ட ஆன்லைனில் ஆர்டர் போட்டால், கவச உடையில் கிங்கரர்கள் வந்து சைனா கொசுமட்டையை வைத்துக் கொசு அடிப்பார்கள். நீங்கள் நிம்மதியாகத் தூங்கலாம்.

பொங்கலன்று அதிகாலையில் எழுந்து பொங்கல் வைக்கக் கஷ்டமாக இருந்தால், ஆர்டர் செய்தால் போதும், ஆன்லைன் ஆட்களே வீட்டு வாசலில் கோலம்போட்டு, பொங்கல் வைத்து, குலவையிட்டு, பொங்கலோ பொங்கல் என்று சத்தமிடுவார்கள். பிறகு கதவைத் தட்டி உங்களை எழுப்பி பொங்கல் பானையை ஒப்படைப்பார்கள். இலவசமாக இரண்டு கரும்பும் கொடுப்பார்கள்.

சங்களுக்கு ஹோம்ஒர்க் சொல்லிக் கொடுக்க எரிச்சலாக இருந்தால், ஆன்லைனில் சொன்னால் போதும். ஸ்பெஷல் டீச்சர்களை அனுப்பி வைப்பார்கள். நீங்கள் நிம்மதியாக டி.வி பார்க்கலாம்.

ங்களால் தினமும் வாக்கிங் போகக் கஷ்டமாக இருந்தால், உங்களை உப்புமூட்டை தூக்கிக்கொண்டு வாக்கிங் செல்ல ஆள் அனுப்புவார்கள். ஆனால் அவர்கள்தான் வாக்கிங் போவார்கள்.

ரொம்ப சூடாக வேண்டுமென்று விரும்பினால், டெலிவரிப் பையன் மற்றும் சட்டி, அடுப்புடன் ஒரு சரக்கு மாஸ்டர் வந்து இரண்டு வடை சுட்டுக் கொடுத்துவிட்டு, சேடிஸ்ஃபிகேஷன் சார்ட்டில் உங்களை டிக் பண்ணச் சொல்லி வாங்கிச் செல்வார்கள்.

ஹேர்கட்டிங் செய்ய இனி ஆன்லைனில் ஆர்டர் போடலாம். ரோலிங் சேருடன் வீட்டிற்கு வந்து முடிவெட்டி, பவுடர் அடித்து, குளிக்க வைத்து, கழுத்து சொடக்கு எடுத்து, கன்னத்தில் திருஷ்டிப்பொட்டு வைத்துவிட்டுச் செல்வார்கள்.

போதுமா... வேறெதுவும் ஆர்டர் பண்ணணுமா பாஸ்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick