விளையும் பயிர்! | School Atrocity - Timepass | டைம்பாஸ்

விளையும் பயிர்!

ள்ளிக்கூடத்தில் இவர்கள் செய்யும் அட்டூழியங்களை வைத்தே எதிர்காலத்தில் என்ன அக்கப்போர்களையெல்லாம் நடத்தப்போகிறார்கள் எனக் கணித்துவிடலாம்.

ருக்கு வெளியே நாவல் மரமோ, இலந்தைப்பழ மரமோ இருந்தால் அதைப் பறித்துக் கொடுத்து வாத்தியார்களை கரெக்ட் செய்யும் கைங்கர்யங்களைக் கற்றவர்கள் அமைச்சராவதற்கான அத்தனைத் தகுதிகளையும் ஒருசேரப் பெற்றிருப்பார்கள்.

பிதாகரஸ் தேற்றத்தை பிட்டடிச்சு எழுதியாச்சும் பாஸாகிடணும்னு நினைக்கிறவன் எல்லாக் கோணங்களையும் அலசி ஆராய்ஞ்சு ஏதாவது ஒரு கேப்புல எஸ்ஸாகி போலீஸுக்கே டிமிக்கி கொடுக்கிற அளவுக்கு பலே கில்லாடியா வருவான்.

ள்ளிக்கூடத்தில் லீடராக இருந்து சஞ்சாயிகா திட்டத்துக்கு கட்டுவதற்குக் கொடுத்த காசையெல்லாம் ஆட்டையைப் போட்டுவிட்டு பத்துநாளைக்கு அந்தப் பக்கமே வராமல் தலைமறைவாகும் தில்லாலங்கடி மாணவர்கள் முகத்தில் எதிர்காலத்தில் பெரிய தொழிலதிபராகும் கலை அப்பட்டமாகத் தெரியும்.

ன்னும் கொஞ்சம் பேர் சின்னபொம்மை மோட்டாரை எடுத்து பேட்டரியோடு செருகி ‘சொய்ங்’னு சுற்றவைப்பது, குண்டுபல்பை எரியவைப்பது எனக் கடுப்பாக்கிவிட்டு எடிசன் ரேஞ்சுக்கு பில்டப் கொடுப்பார்கள். இவர்களுக்குதான் சீக்கிரம் கல்யாணமாகி சின்னவயதில் வாழ்க்கையே சூனியமாகும். பாவத்த!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick