இப்படித்தாம்மா இவங்க! | Kathi film dialogue for Tamil Nadu Political Parties - Timepass | டைம்பாஸ்

இப்படித்தாம்மா இவங்க!

‘கத்தி’ படத்தில் கம்யூனிஸத்துக்கு விஜய் விளக்கம் சொல்லிட்டார். மற்ற கட்சிகளுக்கும் சொன்னால்...

அ.தி.மு.க: எப்படிப் போனாங்களோ அப்படியே திரும்பி வர்றவங்கம்மா. இனிமே எப்படிப் போனாலும் அப்படியே திரும்பி வரப்போறவங்கம்மா.

காங்கிரஸ்: யாரைத் தலைவர் ஆக்குறது, கட்சிக்குள்ள எத்தனைப் பிரிவுகள் இயங்கிக்கிட்டு இருக்குனு தெரியாம அவங்க பஞ்சாயத்தையே முதலில் முடித்து வைக்க வழி தெரியாம முழி பிதுங்குறவங்கம்மா.

நாடாளும் மக்கள் கட்சி: எலெக்‌ஷன்ல நிற்காமலே கூட்டணி பற்றிப் பேசி, தொகுதிப் பற்றிப் பேசி, தேர்தல் அறிக்கைலாம் விடுறவங்கம்மா.

தி.மு.க: திடீர் திடீர்னு அடிச்சுக்கிட்டு கூடிக்கிறவங்கம்மா.

ல.தி.மு.க: ஈரோடு பக்கமோ தூத்துக்குடி பக்கமோ இருக்குனு பேசிக்கிறாங்கம்மா.

தே.மு.தி.க:
தூக்கி அடிக்கிறவங்கம்மா. சில நேரம் இவங்களையே தூக்கி அடிச்சிருவாங்கம்மா.

போதும்மா...            
                             
-ஜெ.வி.பிரவீன்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick