ஆள் பாதி ஆப்ஸ் பாதி! | Apps Freak - Square Register - Timepass | டைம்பாஸ்

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

பாக்கெட்டில் காசு இல்லைனாலும், ஏ.டி.எம்-மில் பணம் இருக்கிற நம்பிக்கையில்தான் வெளியே போவோம். ஆனால், நாம வாங்குற பொருட்களுக்கு பில் போடுறவர், ‘மெஷின் ரிப்பேரா இருக்கு சார்’னு கையை விரிக்கலாம், ‘கார்டு நாட் அக்செப்டட்’னு போர்டைத் தொங்கவிட்டிருக்கலாம். என்ன பண்ணுவீங்க? ‘பக்கத்தில் எங்கேயாவது ஏ.டி.எம். இருக்கும்ல?’ என யோசிக்காதிங்க... நீங்க பர்சேஸ் பண்ற இடத்துக்குப் பக்கத்துல ஏ.டி.எம். சர்வீஸே இல்லை. இருக்கிற ரெண்டு மூணு மெஷினும் ‘பணம் இல்லை’னு சிரிக்குது. இப்போ என்ன பண்ணுவீங்க? முறைக்காதீங்க பாஸ்... நம்மைச் சுத்துற ஏழரைக்கு இப்படிக்கூட ஆகலாம்! ஆனால், இந்தப் பிரச்னைக்கு எளிய முறையில் தீர்வு தருகிறது, ‘ஸ்கொயர் ரிஜிஸ்டர்’ என்ற ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்!

இது ஏ.டி.எம். கார்டுகளைப் பயன்படுத்து வதற்காகவே உருவான பிரத்யேக அப்ளிகேஷன். கூகுள் பிளே ஸ்டோரில் ‘ஸ்கொயர் ரிஜிஸ்டர்’ என்று தேடி, அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்யவும். பிறகு, ஏ.டி.எம். கார்டுகளை மொபைல் மூலமாக ‘ஸ்வைப்’ செய்யும் ‘டோங்கிள்’ ஒன்றை உங்கள் மொபைல் போனுடன் இணைக்க வேண்டும். மிகச்சிறிய அளவில் இந்த டோங்கிள்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன என்பதால், ‘பெட்டி’யைத் தூக்கிக்கொண்டு திரிய வேண்டிய அவசியம் இருக்காது. பிறகென்ன? கடைக்குச் சென்று தேவையான பொருட்களை வாங்கி, உங்கள் மொபைல் போன் மூலமாகவே ஏ.டி.எம். கார்டுகளை ஸ்வைப் செய்துகொள்ளலாம். தொகையைச் செலுத்தியபிறகு, ‘கையெழுத்து’ போட வேண்டிய ஆப்ஷனை இந்த அப்ளிகேஷனே எடுத்து நீட்டும். மொபைல் ஸ்கிரீனிலேயே ஸ்டைலாக கையெழுத்துப் போட்டு விளையாடலாம்!

தவிர, வழக்கமான இ-பேங்கிங் முறையில் பொருட்களை வாங்கவும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தலாம். வாங்கிய பொருட்களுக்கு பில் தேவைப்பட்டால், அப்ளிகேஷனில் இருந்தே டவுன்லோடு செய்துகொள்ளலாம். கிஃப்ட் கூப்பன்களை மொத்தமாக இந்த அப்ளிகேஷனில் இணைத்துக்கொண்டு, தள்ளுபடி பெறலாம். இன்னும் ஏராளமான வசதிகளையும் உள்ளடக்கியது இந்த அப்ளிகேஷன். சிம்பிளா சொன்னா, இனி எங்கேயும் ‘கார்டு அக்செப்டட்’தான்!

டவுன்லோடு லின்க் : https://play.google.com/store/apps/details?id=com.squareup

- கூகுள்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick