ரொம்ப சிறுசு!

ஃப்ரான்ஸ் நாட்டின் லியான் நகரில் உள்ளது லாயர்ஸ் ஹவுஸ் என்ற மினியேச்சர் அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகத்தின் காப்பாளரான டான் ஓமேன், உலகப் புகழ்பெற்ற மினியேச்சர் துறைக் கலைஞர். ஒரிஜினல் கட்டடங்களின் மாதிரிகளை ‘அப்படியே இருக்கேய்யா!’ என நம்மை சொல்லவைக்கும் அளவுக்கு மினியேச்சர் வடிவத்தில் கொண்டு வருவது இவருடைய ஸ்பெஷாலிட்டி. 30 வருடங்களுக்கும் மேலாக இந்தத் துறையில் இவர் பணியாற்றி வருகிறார். தனது படைப்புகள் அனைத்தும் தத்ரூபமாக இருப்பதற்குக் காரணம், ‘ஒரு கட்டடத்தை மினியேச்சர் வடிவத்தில் செய்யும்போது அங்குள்ள சிறு வொயர் முதல் தூசு வரை எதுவுமே மிஸ் ஆகாதபடி அனைத்தையும் கொண்டு வருவதால்தான்’ என்கிறார் ஓமேன். இவரது உருவாக்கத்தில் மியூசியம், உணவகம், மருத்துவமனை எனப் பலவும் மினியேச்சர் வடிவம் பெற்றுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick