தல-தளபதி இணைந்து மிரட்டும்... | Ajith and Vijay's Fans atrocities - Timepass | டைம்பாஸ்

தல-தளபதி இணைந்து மிரட்டும்...

ல-தளபதி படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானாலே சோஷியல் மீடியா முழுவதும் தீப்பற்றி எரியும். இவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து நடித்தால் என்னாகும் என மல்லாக்கப் படுத்து மலங்க மலங்க யோசித்ததில்...

*
எப்படியும் படம் ரிலீஸாகி பத்துப் பதினைந்து நாட்களுக்கு எல்லா தியேட்டரும் ஹவுஸ்ஃபுல்லாக இருக்குமென்பதால், ஆந்திரா பார்டருக்குச் சென்று ‘நவ் வாட்ச்சிங்’ ஸ்டேட்டஸோடு குரூப்பி எடுத்து அதகளம் பண்ணுவார்கள்.

* தியேட்டருக்கு மொத்தம் எத்தனை வாசல் இருந்தாலும் போதாது. அதனால் ட்ரைவ் இன் போல வெட்டவெளியில் திரையை வைப்பது நலம். இல்லாவிட்டால் சுவர் இடிவது உறுதி. ரசிகர்களின் அட்ராசிட்டியில் திரை கிழியாமல் இருக்க, புல்லட் ப்ரூஃப் கண்ணாடி அமைக்க தியேட்டர் நிர்வாகம் நிதி ஒதுக்கியே ஆக வேண்டும்.

* போஸ்டர்களுக்கு நடுவே தியேட்டர் எங்கே இருக்கிறது என்பதைச் சரியாகக் கண்டறியும் ரசிகர்களை ஊக்குவிக்க தல-தளபதி கையெழுத்திட்ட பரிசுப்பொருட்கள் வழங்கப்படும் என விநியோகஸ்தர்கள் கோக்குமாக்காக விளம்பரப்படுத்தலாம்.

* பொதுவாகவே 100, 200 அடிகளில் கட் அவுட் வைப்பது இவர்களது ரசிகர்களின் பழக்கம். இந்தப் படத்திற்கு கிலோமீட்டர் உயரத்திற்கு ராட்சத கட் அவுட்கள் வைப்பார்கள். கட் அவுட்டிற்கு ஹெலிகாப்டரில் சென்று குடங்களைக் கவிழ்த்து பாலபிஷேகம் செய்வார்கள் ரசிக சிகாமணிகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick