இதெல்லாம் நம்பாதீங்க!

விஜய்யும் அஜீத்தும் அவங்க படங்களில் எவ்வளவு குறியீடுகள் சொல்லியிருக்காங்க. எப்போவாச்சும் கவனிச்சுருக்கோமா பாஸ்?

* ‘குருவி’ படத்தில் பல்லாலே கார் ஆக்ஸிலேட்டர் வொயரைக் கடிச்சு கன்ட்ரோல் பண்ணி அந்த ரேஸ்லேயும் கடைசியில் ஜெயிச்சுடுவாரு விஜய். இதிலிருந்து என்ன சொல்ல வராங்கனா, உன்னோட வாயிலதான் எல்லாமே இருக்கு. அதைச் சரியாக கன்ட்ரோல் பண்ணி ஒழுங்கா ஓடினா, வாழ்க்கைங்கிற ரேஸ்ல  வெற்றி உனக்குதான்னு சொல்ல வராங்க.

* ‘வேலாயுதம்’ படத்தில் ஓடிவந்து எல்லோரையும் பயமுறுத்தி அரிவாளால் ரயில் சீட்டை வெட்டி சீட் பிடிப்பார் விஜய். இது எதுக்கான குறியீடுனா, ஒரே ஒரு சீட்டு பிடிக்கிறதுக்காக நம்ம அரசியல்வாதிகள் எவ்வளவு வன்முறைகள், அக்கப்போருகள் பண்றாங்கங்கிறதை சிம்பாலிக்கா சொல்றது.

* அஜீத் நடிச்ச ‘ஆரம்பம்’ படத்தில் வில்லன் குரூப் விஷம் கொடுத்துக் கொல்வாய்ங்க. ஆனா நயன்தாரா மட்டும் சாக மாட்டாங்க. நம்ம ஊரில் சில கடைகளில்  பாய்சன்கள்கூட எக்ஸ்பைரி ஆனவைகளாக, போலியானவைகளாகதான் விற்கப்படுத்துங்கிறதைத் தோலுரித்துத் தொங்கவிட்டிருக்காங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick