சுட்ட படம்!

மலின் ‘குணா’, காலங்கள் கடந்தும் நம் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த சினிமா. அந்த குணாவே ஒரு ஸ்பானிஷ் படத்தின் மையக்கருவைத் தழுவியது என்பது கொஞ்சம் அதிர்ச்சிதானே!

பெட்ரோ அல்மோடோவர் இயக்கி 1990-ல் ரிலீஸான ‘டை மீ அப்! டை மீ டௌன்!’ என்ற டார்க் ரொமான்டிக் காமெடிப்படமே அது. இந்தப் படத்தில் கிளுகிளு அழகி விக்டோரியா ஆப்ரில் மற்றும் பெண்களின் உள்ளம் கவர் கள்வன் ஆன்டனியோ பென்டரஸ், நாயகி-நாயகனாக கலக்கல் நடிப்பில் வெளுத்து வாங்கி இருந்தார்கள். கொஞ்சம் எசகுபிசகான காட்சிகளால் வயது வந்தோருக்கான சினிமாவாக சென்ஸார் செய்யப்பட்டிருந்தாலும் படம் இப்போதுவரை கல்ட் க்ளாஸிக்கில் கொண்டாடப்படும் சினிமாவாக இருக்கிறது.

சரி...படத்தின் கதை ...? ரிக்கி 23-வயதே ஆன மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன். ஒரு மனநலக் காப்பகத்தில் வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறான். சிகிச்சையில் இருக்கும்போது மரினா என்ற பெண்ணை எதேச்சையாகச் சந்திக்கும் சூழல். அவள் முன்னாள் போர்னோ நடிகை.

போதைப்பழக்கத்தில் இருந்து மீண்டு வருபவள். மனநலக் காப்பகத்தில் இருந்து தப்பித்து வந்தவன் அவளோடு ஒரே அறையில் அவள் போதையில் இருக்கும்போது ஒன்றாகத் தூங்குகிறான். அவனுக்கு அவள்மீது பேரன்பும் பெருங்காதலும் பட்டென பற்றிக்கொள்கின்றன. மறுநாள் அவளின் முழு ஜாதகத்தையும் ஒரு சினிமா வார இதழ் மூலம் தெரிந்துகொள்கிறான். ‘தி மிட்நைட் பேண்ட்’ என்ற படத்தின் கடைசிநாள் ஷூட்டிங்கில் இருக்கும் அவளைத்தேடி அங்கு செல்கிறான். அந்தப் படத்தின் டைரக்டர் மேக்ஸிமோவுக்கு மரினாவை அடைய வேண்டும் என்ற வெறி இருக்கிறது. மேக்ஸிமோ பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வீல் சேரில் இருக்கும் ஓர் ஆள் என்பது இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick