உச்சியில் ஒரு நட்சத்திரம்!

சுவிட்சர்லாந்தில் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டல் எல்லாரையும் அட சொல்ல வைத்திருக்கிறது. பிரமாண்டமான கட்டடமா, வெரைட்டியான உணவுகளா என்று நீங்கள் நினைத்தால் அதுதான் இல்லை.

கடல்மட்டத்திலிருந்து 6,463 அடி உயரத்தில் மலை உச்சியில் சின்ன பெட்ரூம் சைஸில் இருக்கிறது இந்த ஜீரோ ஸ்டார் ஹோட்டல். படுத்துக்கொண்டே 360 டிகிரியில் மொத்த இயற்கையையும் கண்குளிரக் கண்டுகளிக்கலாமாம். முற்றிலும் திறந்தவெளியில் வாடிக்கையாளர்களுக்கு ரம்மியமான உணர்வைத் தருவதுதான் இதன் நோக்கம். கட்டட அமைப்புகளே முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்கும் இதில் பாத்ரூம் போவதென்றால்கூட பத்து மைல்கள் கீழே இறங்கி வர வேண்டும். மற்றபடி நம்ம ஊர் போலவே வரவேற்க, ரூம் சர்வீஸ் செய்ய சுவையான உணவுகள் தர பக்கத்திலேயே டென்ட் போட்டுத் தங்கி இருக்கிறார்கள் ஊழியர்கள். ஓர் இரவு தங்குவதற்கு 260 டாலர்கள் வசூல் செய்கிறார்கள். ஜீரோ ஸ்டார்னு சொல்லிட்டு இவ்வளவு காஸ்ட்லியாக இருக்கே... ஹோட்டலுக்கு மக்கள் வராங்களா? எனக் கேட்டால் ‘அடுத்த மாசத்துக்கு இப்பவே புக் பண்ணி வெச்சுட்டாங்க, அந்த அளவுக்கு எப்போதுமே பிஸிதான்’ என்கிறார்கள். வெட்டவெளி சரி. மழை வந்தா என்ன பண்ணுவீங்கனுதானே யோசிக்கிறீங்க? மோசமான  வானிலை வந்தா புக்கிங்கை எந்த நேரமும் கேன்சல் பண்ணிக்கலாமாம்.  ஹ்ம்ம்... நாங்க மொட்டை மாடியிலயே படுத்துக்கிறோம் பாஸ்!

-ஜெ.வி.பிரவீன்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick