சினிமால் | Cinemaal - Timepass | டைம்பாஸ்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/11/2016)

சினிமால்

பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட் வரை போய் வெற்றிக் கொடி கட்டி வந்தாலும், பிரியங்கா சோப்ரா தன் சொந்த மண்ணை மறக்கவே இல்லை.அந்தப் பணத்தை அப்படியே நல்ல படங்கள் எடுக்க முதலீடும் செய்கிறார். போஜ்புரி, மராத்தி மொழிகளில் படங்கள் தயாரித்து வரும் பிரியங்கா, தன் தாய் மொழியான பஞ்சாபியில் நல்ல கதையாக தேடி வந்திருக்கிறார். தற்போது அப்படி ஒரு கதை அமைய, ‘சர்வான்’ என பெயரிட்டு படத்தை ஆரம்பித்துள்ளார். நல்ல மனசுக்காரி!

`வேட்டைக்காரன்' படத்தில் தன் மகன் சஞ்சயை திரையில் தன்னோடு ஆட வைத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் விஜய். ஜெயம் ரவியும் அதேபோல ஒரு முயற்சியில் இறங்கியிருக்கிறார். தான் நடிக்கும் `டிக் டிக் டிக்' என்ற விண்வெளி அறிவியல் படத்தில், தன் மகன் ஆரவ்வை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்த இருக்கிறாராம். இளம் வயது ஜெயம் ரவியாக அவரது மகன் நடிப்பார் என்கிறார்கள். # ஜெயமே லயம்!

நவரச நாயகன் கார்த்திக் `அனேகன்' படத்தில் வில்லனாக என்ட்ரி ஆகி கோலிவுட்டை மிரட்டலாம், `அமரன் 2' எடுத்து தலைகீழாக திருப்பலாம் என போட்ட பிளான் எதுவுமே கை கொடுக்கவில்லை. இந்நிலையில் தானே ஒரு படத்தை இயக்கி நடிக்க முடிவெடுத்து, அதற்கான பணிகளில் இறங்கி விட்டாராம். துப்பறியும் கதையான அதில் 3 நாயகிகள் இருக்கிறார்களாம். அதற்காக நாயகி வேட்டையில் முதற்கட்டமாக இறங்கியுள்ளாராம் இந்த இளைஞர். #`சந்திரமௌலி'னு டைட்டில் வைக்கலாமே!

நீங்க எப்படி பீல் பண்றீங்க