அமிதாப் போல நடிக்கப் போறேன்!

``தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாதவர், சின்னி ஜெயந்த். `தமிழ்சினிமா என்னைக் கண்டுகொள்ளவில்லை' என சமீபத்தில் ஆதங்கப்பட்ட அவரைச் சந்தித்தால், சினிமா மீதான அவர் காதல், கரைபுரண்டு ஓடுகிறது! `தொடரி', `ரூபாய்' என தனது செகண்ட் இன்னிங்ஸில் அடியெடுத்து வைத்திருப்பவர், படங்களைத் தயாரித்து நடிக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறாராம்.

``நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சிவாஜி ராவ் என்கிற ரஜினிகாந்த் இவங்களாதான் நான் சினிமாவுக்கு வந்தேன். கர்நாடக இசைக்குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். ஆர்.வேதவள்ளிகிட்ட முறையா சங்கீதம் கத்துக்கிட்டவன். பல நாடகங்கள் பார்த்து வளர்ந்தவன். நடிகர் திலகத்தைப் பார்த்து ஆறு வயதில் கைதட்டி அழுதவன். என்னை நடிகர் ஆக்கியது ரஜினிகாந்த். `அபூர்வ ராகங்கள்' வெளியானபோது அவரிடமே, `அங்கிள் நீங்கதான அந்தப்படத்துல நடிச்சது'ன்னு கேட்டிருக்கேன். முதல் ஷாட்லேயே சூப்பர் ஸ்டாரோட நடிச்சேன். புரட்சித்தலைவி அம்மாவினுடைய நாட்டிய நாடகத்தின் ரிகர்சல் என்னோட ஏழு வயசில் பார்த்திருக்கிறேன். என் வயதில் இருக்கும் எந்த நகைச்சுவை நடிகனுக்கும் இந்த சான்ஸ் கிடைச்சிருக்காது. அப்படிப்பட்ட சினிமா என்னை அவ்ளோ ஈஸியா கை விட்டுடாதுங்க! திடீரென ஓர் இடைவெளி. ஏனோ, என்னைக் கூப்பிடலை. எதுக்காகக் கூப்பிடலைங்கிற காரணத்தையும் சினிமாவுல கண்டுபிடிக்கமுடியாது. எனக்குன்னு இல்ல, பலருக்கும் இப்படி இடைவெளி இருந்திருக்கு. இது சினிமாவோட மரபு!''- ஃபீலிங் மோடில் பேசுகிறார், சின்னி ஜெயந்த்.

``திடீர்னு இயக்குநர் ஆனீங்களே?"

``நாமளும் படம் இயக்குவோம்னு `சின்னப்புள்ள'னு படம் எடுத்துப் பல புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுத்தேன். அப்புறம் சில படங்கள் இயக்கினேன். பிறகு நடிக்கலாம்னா, எல்லா ஹீரோக்களும் காமெடியையே ஹீரோயிஸமா பண்ணிக்கிட்டு இருந்தாங்க. இவங்களையெல்லாம் தாண்டி ஒரு லைன் பிடிக்கணும்னு நான் பாடவே ஆரம்பிச்சேன். அங்கேயும், இதுவரை யாரும் பண்ணாததைப் பண்ணலாமேனு டி.எம்.செளந்தர் ராஜன் வாய்ஸைத் தேர்ந்தெடுத்தேன். அவர் வாய்ஸ்ல பாடுறது கஷ்டமான காரியம்!''

``சரி, நீங்க நடிகரா பெருமைப்படுற விஷயம் என்ன?''

``நடிகர் திலகம், உலகநாயகன், சூப்பர் ஸ்டார் முன்னாடி அவங்களோட  வசனத்தை மிமிக்ரி பண்ணியிருக்கேன். எமோஷனலா பேசுறேன்னு நினைக்காதீங்க. அப்படியெல்லாம் லக் அடிச்ச எனக்குத்தான் இடைவெளி விழுந்தது. சின்னி ஜெயந்த் எப்படியோ பொழைச்சுக்குவான். ஆனா, நடிப்பை மட்டுமே நம்பி வர்றவங்க என்ன பண்ணுவாங்க? அவங்களைக் கைவிட்டுடாதீங்க இயக்குநர்களே! நான் ஏன் இன்னும் இளமையாவே மெயின்டெயின் பண்றேன் தெரியுமா, இன்னும் ஒண்ணுமே சாதிக்கலை. இதோ, சமீபத்துல பிரபு சாலமன் கூப்பிட்டு நடிக்கச் சொன்னதும், கேரக்டர் என்னன்னு மட்டும் கேட்டுட்டுப் போய் நின்னேன். இதை வருத்தத்துல சொல்லலைங்க... ஆதங்கத்துல சொல்றேன்!''

``ரொம்பநாளா இருக்கிற ஆசை?''

`` `தில்லானா மோகனாம்பாள்' மாதிரி ஒரு படத்துல, இன்னைக்கு இருக்கிற பத்து காமெடி நடிகர்களோட சேர்ந்து நடிக்கணும்னு ஆசை. ஷங்கர், மணிரத்னம்னு யார் முயற்சி பண்ணாலும், அதெல்லாம் இங்கே சாத்தியமானு தெரியலை! சினிமாவுக்கு வரிவிலக்கு கொடுக்குறாங்க. சினிமா டெக்னீசியன்ஸுக்கும் வரிவிலக்கு கொடுக்கணும். இன்னைக்குப் பாலிவுட்ல இருக்கிற டாப்-10 ஒளிப்பதிவாளர்கள் லிஸ்ட்டைப் பாருங்க. பாதிப்பேரு நம்மாளுங்களா இருக்காங்க. நம்மளுக்குள்ளே ஆரோக்கியமான ஒற்றுமை இல்லைனா, எதுவும் பண்ணமுடியாது. நான் முதன்முதலா கார் வாங்கினப்போ, `என்ன ஃபீல் பண்றீங்க'னு கேட்டாங்க. `என்னை மாதிரி என் ஃபிரெண்ட்ஸ் எல்லோரும் கார் வாங்கணும். அப்போதான், என் கார் ரிப்பேர் ஆகும்போது, அவனோட கார்ல போகமுடியும்!'னு சொன்னேன். தமிழ்சினிமாவுல இருக்கிறவங்க அப்படித்தான் இருக்கணும்னு ஆசைப்படுறேன்.''

``புதிய அலை இளம் இயக்குநர்கள் எல்லாம், எதை மிஸ் பண்றதா நீங்க நினைக்கிறீங்க?"

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick