ஆஃப் த ரெக்கார்டு!

தாடிக்கார நடிகரை நிகழ்ச்சிக்கு நடுவராக ஒப்பந்தம் செய்துள்ளது வெற்றி நிறுவனம். அதில் அமைப்பாளர்கள் சொல்வதற்கு மாறாக `இப்படி பண்றேன், அப்படி பண்றேன்' என தன்னிச்சையாக ஏதேதோ செய்வதால் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கடுப்பில் உள்ளார்களாம்.

‘விரல்’ நடிகரை ‘வேட்டை யான’ படத்துக்கு ஒப்பந்தம் செய்து, நடிக்காத அந்த படத்துக்கு ஒரு கோடி அட்வான்ஸ் கொடுத் தாராம் ‘லிங்க்’ இயக்குநர். தற்போது நெருக்கடியில் இருப்பதால் அதை கேட்க, விரல் கையை விரித்து விட்டாராம். சங்கத்தை நாடி இருக்கிறார் இயக்குநர்.

‘ஜாப்லெஸ்’ படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்க நினைத்த நடிகர் அதன் இயக்குநரைக் கழற்றிவிட்டு, படத்தை அறிவித்ததால் நடிகர் மீது செம்ம கடுப்பில் இருக்கிறாராம் அந்த கூர்மையான இயக்கம்!

மகளை நாயகியாக அறிமுகப்படுத்தும் மும்முரத்தில் நடிகை இருக்க, மகளோ பார்ட்டி, பப் என சுற்ற, அந்த போட்டோக்கள் நெட்டில் லீக்காக... கடுப்பாகிவிட்டாராம் அந்த முன்னாள் அழகு `மயில்'!

‘சதுரங்க’ படத்தை இயக்கியவர் காட்டன் ஹீரோவை இயக்கும் அடுத்த படத்துக்கு, `ஹேப்பி மியூஸிக் வேணும்' என நடிகரிடம் கேட்க, `அவரைத் தவிர யாரை வேணும்னாலும்  புக் பண்ணிக்கோங்க' என ஒரே வார்த்தையில் கோபமாக முடித்துவிட்டாராம் நடிகர்.

‘அன்னை இல்லம்’ இப்போது ‘பன்ச்’ நடிகரின் கால்ஷீட்டுக்கு காத்திருக்கிறது. இந்நிலையில் `வெல்த்தி' இயக்கினால் அந்தப் படத்தை நான் தயாரிக்கிறேன் என ஒல்லி நடிகர் கேட்டிருக்கிறாராம். இதனால் வாய்ப்பு நழுவிடுமோ என கவலையில் இருக்கிறாராம் இல்லத்தின் இளைய வாரிசு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick