“அ.தி.மு.க-வுக்காக பிரசாரம் செய்வேன்!''

“எப்படியும் இந்தப் பேட்டில கல்யாணம் பத்தி கேட்பீங்க. நிறைய பேரு, `என்னம்மா இந்த  மாதிரி ஷோ எல்லாம் பண்ற, கல்யாணம்லாம் நடக்குமா'ன்னு கேட்குறாங்க, சோஷியல் மீடியாவுலயே நிறைய ப்ரோபோசல் வருது. எல்லோருமே, `ரொம்ப ஓப்பனா பேசுற தைரியமான பொண்ணா இருக்கே!'ன்னு சொல்றாங்க. தைரியமா பேசி னாலும் எனக்குள்ள ஒரு குழந்தைத்தனம் இருந்துகிட்டுதான் இருக்கு. எனக்கு  கல்யாணத்துல எல்லாம் இஷ்டம் இல்ல ஜி. கல்யாணம் பண்ணாம குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கணும்னு ஆசை!” -ஆரம்பமே அதிரடியாய்த் தொடங்குகிறார் கேப்டன் டிவியை நாடறியச் செய்த `சமையல் மந்திரம்' புகழ் திவ்யா இப்போது த்ரிஷாவோடு `மோகினி'யில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

``பிரதமர் மோடியைப் பற்றிய விமர்சனம், முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவா வீடியோ... திவ்யாவுக்கு அரசியல் ஆசை இருக்கா?''

``எனக்கு என் நாட்டு மேல சமூக அக்கறை இருக்கு. எல்லோரின் மனசுக்குள்ளேயும் அநியாயத்தைத் தட்டிக் கேட்கணும்னு கோபம் இருக்கும். ஆனா செய்யறது இல்லை. அதை நான் வெளிப்படையா செய்யறேன். கறுப்புப் பணத்தை ஒழிக்கணும்கிற நோக்கம் சரியா இருக்கலாம். ஆனால் அதைச் செயல்படுத்தினதில பாதிக்கப்படுறது என்னவோ அப்பாவி மக்கள் தான்.''

``சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்துட்டீங்க. யார்கூட நடிக்கணும்னு ஆசை?''

``எனக்கு சிம்பு ரொம்பப் பிடிக்கும். அவர்கிட்ட பேசும்போதும் இவ்வளவு தீவிர ரசிகையான்னு ஆச்சர்யப்பட்டாரு. சிம்புவை ஸ்கீரின்ல பார்க்கும்போதோ  டிவில பார்க்கும்போதோ இவர் கூட ஒரு சீனாவது நடிச்சுர மாட்டோமான்னு தோணும். `அச்சம் என்பது மடமையடா' பார்க்கும்போது கண்ணு சிம்புவைத் தாண்டி எங்கேயுமே போகலைன்னா பார்த்துக்கோங்க.''

``ஷகீலாவுக்கு ரொம்ப க்ளோஸ்னு சொன்னாங்க?''

``இன்னும் நிறைய பேரு என்னைய `ஷகீலா பொண்ணா'ன்னுகூட கேட்டாங்க. சமையல் மந்திரம் நிகழ்ச்சி எனக்குப் பிறகு அக்காதான் பண்ண ஆரம்பிச்சாங்க. அப்போ போன் பண்ணி, `எப்படி திவ்யா பேசணும்?' னு என்கிட்ட கேட்டாங்க. `அக்கா எவ்வளவு பெரிய ஆர்டிஸ்ட். என்னைய கிண்டல் தானே பண்றீங்க?'ன்னு கேட்டேன். `இல்லடி நடிக்கிறதெல்லாம் பிரச்சனை இல்ல. டைரக்டர் சொல்லிக் கொடுக்குற மாதிரி நடிச்சிடலாம். ஆனா எப்படி பேசணும்னு தெரியலை'ன்னு சொன்னாங்க. `போரடிக்குது அக்கா'ன்னு சொன்னா, `உடனே கிளம்பி வீட்டுக்கு வாடி'ன்னு கூப்பிடுவாங்க. அவ்ளோ அன்பா பார்த்துக்குவாங்க.'' 

``கேப்டன் டிவில இருந்திருக்கீங்க. கேப்டன் என்ன சொன்னார்? அவரோட அரசியல் செயல்பாடு?''

``பிரேமலதா மேடமும் விஜயகாந்த் சாரும் ஷோ பார்த்துட்டு பாராட்டி இருக்காங்க. அவங்க அரசியல்ல அம்மா கூடவே இருந்திருந்தாங்கனா இன்னும் பெரிய அளவில போயிருக்கலாமோன்னு தோணும்.'' 

``உங்களோட ரோல் மாடல் யாரு?''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick