ஆண் என்றால் அழகு! | Boys Always Cute - Timepass | டைம்பாஸ்

ஆண் என்றால் அழகு!

பொண்ணுங்களை வர்ணிச்சுப் பசங்க மட்டும் வரி வரியாக் கவிதைகள் எழுதுறாங்களே... பொண்ணுங்களோட கண்களுக்குப் பசங்க அழகாத் தெரியற ‘எனதழகா...!’ மொமென்ட்ஸ் என்னன்னு தெரியுமா பாய்ஸ்?

பைக்லேயோ, நடந்து போகும்போதோ கோயில் வந்தா நிற்காம, அப்படியே சும்மா லைட்டாத் திரும்பி சாமிக்கிட்ட அட்டெண்டன்ஸ் போட்டுக்கிற பசங்க செம்ம க்யூட்!

பஸ்ல போகும்போது பொண்ணுங்க வந்தா கண்டக்டர் மூக்கு வியர்த்து ஸீட் மாறி உட்காரச் சொல்வார். `டேய், நான் உனக்கு என்னடா பாவம் பண்ணேன்’ங்கிற ரேஞ்சுல சிரிச்சுக்கிட்டே இடம் மாறி உட்காரும்போது ச்சோ... ஸ்வீட்!

பொண்ணுங்க பசங்ககிட்ட பேசிட்டுத் திரும்ப வரும்போது, கூட இருக்கும் பசங்க ‘ஏய், என்னடா... அதுவா வந்து பேசுது. அப்போ... அப்போ அதானே’னு கலாய்க்கும்போது, ‘டேய் மச்சான் ஃப்ரெண்டுடா... அமைதியா இருங்கடா... கேட்டுடப்போறா’னு அசடு வழியும்போது பக்கா!

‘அச்சச்சோ, என் ஆள் வர்றா... அவ முன்னாடி என்னை ‘டா’ போட்டுப் பேசிடாதே... அப்புறம் நான் செத்தேன்’னு பிரியமான தோழிகிட்டே கெஞ்சும்போது, அந்த அம்மாஞ்சி மூஞ்சி அம்புட்டு அழகு!

அக்கம்பக்கம் பார்த்துட்டு யாரும் வராத நேரமாகப் பார்த்து பைக் கண்ணாடியைத் திருப்பிவிட்டுத் தலைமுடியைக் கையாலேயே கரெக்ட் பண்ணிட்டுத் தனக்குத்தானே சிரிச்சுக்கும்போது ஹா... ஹா... மெர்சல்!

கூட்டத்துல கூடவே போய்ட்டுருக்கிற நம்மளைத் திடீர்னு காணோம்னு தேடி அலைஞ்சு, கண்டுபிடிச்சு, ‘லூசு எங்கேடி போய்ட்ட’னு லேசாத் தலையில குட்டும்போது, அந்த அக்கறை கலந்த அழகு இருக்கே... அழகோ அழகு!

சினிமா தியேட்டர்ல முன்னாடி நிற்கிறவங்ககிட்டே பொண்ணுங்க போய், ‘ப்ளீஸ் டிக்கெட் எடுத்துக் கொடுங்களேன்’னு தயங்கித் தயங்கிக் கேட்கும்போது ‘யாமிருக்க பயமேன்’ங்கிற மாதிரி லுக் விடுவாங்க பாருங்க... பியூட்டிஃபுல்!

அண்ணாச்சி கடையில் நின்னுக்கிட்டு ஏதோ சரக்கு கேட்கப் போற மாதிரி ‘தேங்காய் ரெண்டு, பொட்டுக்கடலை பாக்கெட் ஒண்ணு கொடுங்க’னு கூடையை வெச்சிக்கிட்டு வியர்த்து விறுவிறுத்து பாவமா சங்கோஜப்பட்டு நிற்கும்போது

ஆசம் ஆசம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick