இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்!

‘ஆடத் தெரியாதவன் தெருக்கோணல் என்றானாம்’ - இந்தப் பழமொழியின் விளக்கத்திற்கு ஏத்தமாதிரி, வேலை பார்க்கத் தெரியாமலேயே சொதப்பிட்டு, இந்தப் பொண்ணுங்க அதுக்கு எப்படியெல்லாம் அந்தலை சிந்தலையாகக் காரணங்களைச் சொல்லிச் சமாளிப்பாய்ங்கன்னு லைட்டா பயந்துக்கிட்டே யோசிச்சுப் பார்த்தா... (இதில் துளியும் அரசியல், சினிமா, உப்பு, புளி, மிளகாய் இல்லை என உறுதியளிக்கப்படுகிறது)

தண்ணி குடிக்கப் போறதைத் தவிர வேறெதுக்கும் சமையற்கட்டுக்குள்ளே கால் வைக்காமல், முதல்முறையா பொண்ணுங்க ரசம் வைக்க ஆரம்பிச்ச நாள். அந்த நாளை அவங்க மறந்தாலும் வீட்டில் இருக்கும் மத்தவங்க அவ்வளவு சீக்கிரமா மறந்துட முடியாது. சாப்பிடுறப்போ ரசத்துல என்ன என்ன ஐட்டங்கள் கிடக்குமென்று யோசிச்சு யோசிச்சு ஒண்ணொன்னா அள்ளிப்போட்டு... கடைசியில் பார்த்தால் அஞ்சறைப் பெட்டியில் இருந்த எல்லா ஐட்டங்களும் அந்தப் பாத்திரத் தண்ணீரில் (அட... அதாங்க ரசம்!) மிதந்து கொண்டிருக்கும். சாப்பிட்டுப் பார்த்தாதான் கடுகும், மிளகும் கொட்டிக் கசந்து ரசமே விஷமாகிப் போனது தெரியவரும். அப்புறம் என்ன... ‘எடுக்கும்போது கடுகு டப்பா தவறி ரசம் வைக்கிற பாத்திரத்துக்குள்ளேயே கொட்டிடுச்சு மம்மீ...’ எனச் சமாளிப்பார்கள். அதான் வரலைல்ல... அடுத்தவிங்க உசிரோட விளையாடாத தாயீ!

வண்டியை ஒழுங்கா ஓட்டத் தெரியாமலேயே, ‘ஓட்டத் தெரியும்’னு சீன் போட்டு எடுத்துட்டுப் பின்னாடி நம்மளையும் உட்காரவெச்சு நுறு மீட்டர் போறதுக்குள்ளேயே நாலைஞ்சு பேர்கிட்ட திட்டு வாங்க விடுவாய்ங்க. ‘எலேய் உன்ன நம்பிப் பின்னாடி உட்கார்ந்ததுக்கு சிக்னலுக்கு நடுவுலேயே சம்மணம் போட்டு உட்கார்ந்துருக்கலாம் போலயே’ன்னு நம்மளைக் கதற விடுவாய்ங்க. அப்போகூட விட்டுக் கொடுக்காம ‘பின்னாடி ஆள் இருந்தா மட்டும்தான் லைட்டா உதறும். மத்தபடி பயங்கரமா ஓட்டுவேன்’னு சமாளிப்பாய்ங்க. ஏம்மா... இது தான் அந்த லைட்டாவா..?

என்னதான் இன்ஜினீயரிங்லாம் படிச்சிருந்தாலும், வீட்டில திடீர்னு வேலை செய்யாமல் போன ரிமோட்டுக்கு பேட்டரி கூட மாத்த மாட்டாய்ங்க. ஆனாலும், எதையாவது சொல்லிச் சமாளிக் கலைன்னா நம்மளோட மரியாதை என்னாகுறதுன்னு ‘நாங்க படிச்சதெல்லாம் லேட்டஸ்ட் எல்.இ.டி- டி.வி ஃபேப்ரிக்கேஷன் டெக்னிக் தான்’னு கூடமாட ரெண்டு, மூணு இங்கிலீஷ் வார்த்தைகளைப் போட்டுப் பேசிச் சரிக்கட்டிடுவாய்ங்க. வீட்டில் இருக்கிறவங்களும் ‘இந்தப் பொண்ணுக்குள்ளேயும் என்னமோ இருந்திருக்கு பாறேன்’னு சிலாகிச்சுடுவாய்ங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick