B.E = பேச்சுலர் ஆஃப் எரிச்சல்!

வெத்தலைல மை போட்டு பார்க்கிறது, `போட்டோ எடுத்தா வயசு குறைஞ்சிடும்'னு சொல்றது, `ப்ளூ டிக் வந்தா ரிப்ளை வரும்'னு நம்புறது இதெல்லாம் எந்த அளவுக்கு மூட நம்பிக்கையோ, அதே அளவுக்கு இன்ஜினீயரிங் பற்றியும் நிறைய மூடநம்பிக்கை நம்மகிட்ட சுத்திக்கிட்டு இருக்கு. இன்ஜினீயரிங் காலேஜுக்குப் போயிட்டு வர்றவங்களுக்கு மட்டும்தான் தெரியும், மக்கள் நினைக்கிறதும், காலேஜ்ல நடக்குறதும் வேற வேறனு! இந்தா தெரிஞ்சுக்கோங்க...

பொதுவாகவே மெக்கானிக்கல் படிக்கிற பசங்களுக்கு கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருக்காதுனு எல்லோரும் சொல்வாங்க. மெக்கானிக்கல் டிபார்ட்மென்ட்ல பொண்ணுங்க இல்லைங்கிறதால எல்லோரும் அதை ஈஸியா நம்பிடுவாங்க. ஆனா, அந்த எடுபட்டப் பசங்கதான் ஒரு கிளாஸ் விடாம எல்லா கிளாஸ் பொண்ணுங்க நம்பரையும் வாங்கி ஒரே டைம்ல கடலை போட்டுட்டு இருப்பானுங்க. இதுக்கு அந்தப் பொண்ணோட கிளாஸ் பசங்களையே ஹெல்ப்புக்கு யூஸ் பண்ணிக்கிறதுதான் கொடுமை.

இந்த ஐ.டி, கம்ப்யூட்டர் சயின்ஸ் டிபார்ட்மென்ட்ல இருக்கிற பொண்ணுங்க எல்லாம் அழகான பொண்ணுங்கனு எல்லோரும் காலம் காலமா நம்பிக்கிட்டு இருக்காங்க. ஆனா பாவம்,

அந்த கிளாஸ்ல படிக்கிற பசங்களுக்குத்தான் தெரியும் அது எவளோ பெரிய பொய்னு! எப்பவும் நம்ம கிளாஸைவிட பக்கத்து கிளாஸ் பொண்ணுங்கதான் பாஸ் அழகா இருப்பாங்க.

`ஏரோனாட்டிக்ஸ்' படிக்கிற பசங்க எல்லோரும் என்னமோ ஏரோபிளேன்கூடவே குடும்பம் நடத்துற மாதிரிதான் எல்லோரும் ஆச்சர்யமா பேசுவாங்க. ஆனா உண்மை என்னன்னா அவனுங்ககூட மோடி ஏரோபிளேன்ல `பறவையா பறக்குறோம்'னு பாடிக்கிட்டே பறந்தா ஆஆஆஆஆஆன்னு வானத்தைதான் பார்ப்பானுங்க. எப்போதாவது சொந்தக்காரங்களை சவுதி அனுப்ப மீனம்பாக்கம் வந்தா, `உண்மையான` ஏரோப்பிளேனை நேர்ல பார்க்க வாய்ப்பிருக்கு.

கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிற பசங்களுக்கு ‘அயன்’ பட சூர்யா ரேஞ்சுக்கு கம்ப்யூட்டர்ல எல்லாம் தெரியும்னு பேசுனீங்கனா, அவ்வளவுதான்! அவனுங்க எல்லாம் ‘நேரம்’ பட நாசர் கணக்கா `சி.டி டிரைவ் பண்ணத் தெரியுமா'ங்கிற ரேஞ்சுலதான் இருப்பானுங்க. அட, டோரன்ட்ல ஒரு படம்கூட டவுன்லோட் பண்ணத் தெரியாத பச்ச மண்ணு பாஸ் அவங்க.

சிலர் எப்பவும் லைப்ரரியில் உட்கார்ந்து நோட்ஸ் எடுத்துட்டே இருப்பாங்க. பார்க்கிற எல்லோரும் அவங்களை ஏதோ ‘7ம் அறிவு’ ஸ்ருதி மாதிரி ரிசர்ச் பண்றாங்கனுதான் நினைப்பாங்க. ஆனா, நிஜத்துல முக்கால்வாசி பேரு லைப்ரரியில் உள்ள வைஃபையைத்தான் யூஸ் பண்ணிட்டு இருப்பானுங்க. அங்க மட்டும்தான் நெட்டு ஸ்பீடா இருக்கும். ஏன்னா, அங்கேதான் யாருமே வர மாட்டாங்க.

எப்பவும் இந்த இன்ஜினீயரிங் படிக்கிற பசங்க யாருக்கும் `தமிழே தெரியாதுப்பா'னு எல்லோரும் சொல்லிக்கிட்டு இருப்பாங்க. உண்மை என்னன்னா முக்கால்வாசிப் பசங்க `கற்றது தமிழ்' ஹீரோ கணக்கா எப்பவும் தமிழ் இலக்கியம் படிச்சுட்டு இருப்பாங்க. தமிழ்ப் படிச்சு படிச்சு முக்கால்வாசிப் பேர் போதிதர்மர்ல பாதி தர்மர் ஆகி இருப்பாங்க.

ஃபைனல் இயர் படிக்கிற எல்லோரும் எப்போ பார்த்தாலும் `புராஜெக்ட்'னு எங்கேயாவது சுத்திக்கிட்டே இருப்பாங்க. இதெல்லாம் பார்த்துட்டு நம்ம புள்ளை வசீகரன் மாதிரி எதையாவது ஆராய்ச்சி பண்ணி  சிட்டி கணக்கா எதையாவது கண்டுபிடிப்பானு மட்டும் நினைக்காதீங்க. இன்ஜினீயரிங் அகராதியில் புராஜெக்ட்னாலே அது சென்டர்ல கொடுத்து வாங்குறதுதான்.

நாலு வருஷம் இன்ஜினீயரிங் படிச்சிட்டு வெளியே வர்ற பசங்க எல்லோரும் நல்லா இங்கிலீஷ் பேசுவாங்கனு யாராவது சொன்னா அவங்களுக்கு `ஹா ஹா' ரியாக் ஷனைக் கொடுத்துட்டு அப்படியே போயிடுங்க. அவங்க எல்லோருக்கும் `ஏ ஃபார் ஏஞ்சலினா ஜோலி' அப்படின்னுகூட சொல்லத் தெரியாது. அடப் போங்க பாஸு.

இதெல்லாத்தையும்விட இன்னொரு முக்கியமான மூடநம்பிக்கை இருக்கு. அதான் பாஸு... இன்ஜினீயரிங் படிச்சா வேலை கிடைக்கும்னு சொல்றது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்