கதை விடுறாங்க!

‘`ரூபாய் நோட்டை மாற்றுவதற்காக அருண் பேங்க் வாசலில் காத்துக்கொண்டிருந்தபோது...’’- இந்த ஒரு வரியை டெவலப் செய்து, டைம்பாஸ் வாசகர்கள் சொன்ன குட்டிக்கதைகள் இதோ...

சுராஜ் : பேங்கில் விரலில் மை வைப்பதைப் பார்த்ததும், ஓட்டுக்கு எவ்வளவு என்று கேட்டான். நம்மளை எல்லாம் திருத்தவே முடியாது பாஸ்!

கிருத்திகா பாலகிருஷ்ணன் : பின்னால் நின்ற அவன் சித்தப்பா, “தம்பி மயக்கமாக வருகிறது” என்றார். பதறிப்போன அருண் தண்ணீரைக் கொண்டு வருவதற்குள் க்யூ நகர்ந்திருந்தது. வங்கி வேலை நேரம் முடிந்திருந்தது. கையில் நோட்டை எண்ணியபடி அவன் சித்தப்பா வெளியே வருவதைப் பார்த்த அருண் மயக்கமானான். வட போச்சே!

குலாம் மொஹைதீன் : ‘சாயம் போகும் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டு இன்று பகல் 12 மணியிலிருந்து செல்லாது’ என அறிவிப்பு வந்தது. இதைக்கேட்டு குழம்பிப்போய் அருண் மயக்கமடைந்து கீழே விழுந்தான்.

ப்ரக்யா : காலையில் இருந்து கால் வலிக்க வரிசையில் நின்று கொண்டிருந்தான். அப்போது வேகமாக ஒருவன் பேங்கில் நுழைவதைப் பார்த்ததும், அருண் கோபப்பட்டு, பளார் என்று அறைவிட்டு கடைசி வரிசையில் நிற்கச் சொன்னான். அப்புறம்தான் தெரிந்தது. அவர்தான் பேங்க் கேஷியர் என்று!

தேவபாலன் : அவன் ரூபாய் நோட்டை மாற்றி முடித்தபோது, அவனுக்கு இரண்டு வயது கூடியிருந்தது.

மீனு ராஜ் : அப்போது அங்குவந்த தன் முன்னாள் காதலியை அருண் பார்த்தான். பின் அவளுக்கும் சேர்த்து ரூபாய் நோட்டை மாற்றிக்கொடுத்துவிட்டுச் சென்றான். ஏனென்றால் முதல் காதலை யாராலும் மறக்க முடியாது.

ரேண்டி : அலுவலக நேரம் முடிந்துவிட்டது என்று திருப்பி அனுப்பப்பட்டான். அவன் நின்றான்... நிற்கின்றான்... நிற்பான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick