நல்லா கிளப்புறாய்ங்க..!

ந்தக் காலத்துலேயும் மவுசு குறையாததுக்கு தங்க நெக்லஸையும், தலப்பாகட்டி லெக்பீஸையும் உதாரணமா சொல்வாங்க. இன்னொண்ணும் இருக்கு. அதான் வதந்தீஸ்! லேட்டஸ்ட்டா வந்த புது ரூபாய் நோட்டுலகூட சிப்பு வெச்சிருக்காங்கனு கெளப்பிவிட்டதுக்கு, மோடியே ரூம் போட்டுச் சிரிச்சிருப்பார். வதந்தி பரப்புறது புதுசில்ல பாஸ். கொஞ்சம் ரீவைண்ட் பண்ணிப் பார்ப்போமா?

ஆட்டோ காட்டேரி :  நாமெல்லாம் உட்வெர்ட்ஸ் வாட்டர் குடிச்சுக்கிட்டு இருந்த காலத்துலேயே மிஸ்டர்.கொடூரர் ஒருவர் கொளுத்திப்போட்ட வதந்தி இது. நடுராத்திரி குழந்தையோட ஆட்டோவுல ஏறுன ஒரு அம்மா, டிரைவர்கிட்ட கண்ணாடியைப் பார்க்காம ஓட்டச் சொல்லுச்சாம். பள்ளம் ஒண்ணுல ஆட்டோ ஏறி, இறங்குனப்போ எதேச்சையா கண்ணாடியைப் பார்த்த டிரைவர் கதிகலங்கிப் போயிட்டாராம். பிகாஸ்... அந்தம்மா குழந்தையைக் கடிச்சுத் தின்னுக்கிட்டு இருந்துச்சுங்கிறதுதான் ஷாக்கிங் க்ளைமாக்ஸ்! ஆறுதல் என்னன்னா, இதே காலகட்டத்துல கர்நாடகாவுல ஒரு காட்டேரி, தினமும் ஒரு மணிக்கு வந்து கதவைத் தட்டிக்கிட்டு இருந்துச்சாம். தொறந்தா, கடிச்சுத் தின்னுடும்னு கெளப்பி விட்டிருந்திருக்காங்க!

மங்கி பாய்ஸும், ஜம்பிங் கய்ஸும்: பிக் ஃபூட், ஏட்டி... இதுங்கெல்லாம் காட்டுக்குள்ள சுத்துற மர்ம மனிதர்கள்னு ஒரு வதந்தி. 2001-ல் இதுக எல்லாம் மொட்டைமாடியில தூங்குறவங்களைக் கட்டிப்பிடிச்சு, `செத்துச் செத்து விளையாடலாமா?'னு கேட்டதா கெளப்புனாங்க ஒரு வதந்தி. இந்த வதந்தியில நாமளும் ஏன் பங்கெடுத்துக்கக்கூடாதுனு ஆசைப்பட்ட சில இளசுகள், கொரில்லா டிரெஸ்ஸை வாடகைக்கு வாங்கி மாட்டிக்கிட்டு, வாலாட்டுன சம்பவங்களும் நடந்துச்சு! அதேசமயம், தமிழ்நாட்டுல கெமிஸ்ட்ரியை வெச்சுப் பத்தவெச்சாங்க ஒரு வதந்தியை. ‘அங்கங்க பகல்ல தீப்பிடிக்குது’ என்பதுதான் வதந்தி. ஆராய்ச்சியில இறங்குனா, சாணியில பாஸ்பரஸைப் பதுக்கி, வீடுமேல எறிஞ்சுட்டுப் போயிருக்காங்க. பகல்ல சாணி காய்ஞ்சதும், பாஸ்பரஸ் பத்திக்குதுனு ஆராய்ச்சி முடிஞ்சது. சரி... யார் பார்த்த வேலை இதுனு கேட்டா, ஸ்பிரிங் ஷூ போட்ட சில மனிதர்கள் நடமாடுறதாவும், அவங்க இந்த வெடிகுண்டைத் தூக்கிப் போட்டுட்டு, குதிச்சுக் குதிச்சு ஓடிடுறதாவும் கெளம்புச்சு இன்னொரு வதந்தி. யாராச்சும் அவங்களைப் பிடிக்கப் போனா, ஸ்பிரிங் ஷூவால பனைமர உயரத்துக்குக் குதிச்சாங்களாம் பாஸ்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick