ஆத்தீ இது லேடிஸ் ஹாஸ்டல்!

ள்ளிக்காலம்தான் வீட்ல இருந்தே போயிடுச்சே, இந்தக் காலேஜ் வாழ்க்கையையாவது கலகலப்பா கழிக்கணும்னு ஆசைப்படுற பொண்ணு, பல சாகசங்களுக்குப் பிறகு ஒருவழியா ஹாஸ்டலில் சேர்ந்து படிக்க அனுமதி வாங்குவா. வீட்டுல `கண்டிஷன் அப்ளை' கோரிக்கையோட ஹாஸ்டலுக்கு வந்தா, இங்கே இருக்கு ஏராளமான ட்விஸ்டு!

ஏற்கெனவே பழக்கமான தோழி ஒருத்திகூட இல்லாம ஹாஸ்டலில் சேர்ந்த முதல்நாள் கொஞ்சம் சிரமம்தான். புதுசா தங்குற ரூம் கிட்டத்தட்ட பேய் பங்களா மாதிரியும், பழக்கமில்லாத அந்த ரூம்மேட் பேயாகவும் தெரிவது எனக்குத்தானோ?

எல்லா சாலைகளும் ரோமுக்குப் போகலாம். ஆனா, ஹாஸ்டலில் எல்லா ரூம் ஃபேனும் சூப்பரா சுத்தும்னு சொல்ல முடியாது. விரல் விட்டு சுத்தி விடும்போதெல்லாம், வீட்ல மின் சிக்கனத்துக்காக வீணா ஓடுற ஃபேனை அம்மா ஆப் பண்ணும்போது, வீம்புக்கு ஆன் செய்து வம்பிழுக்கிறது நினைவுக்கு வரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்