சினிமா விடுகதை!

பாம்பே ஜெயஸ்ரீ தனித்தும், இணைந்தும் பாடிய பாடல்கள்தான் இந்தவார சினிமா விடுகதைக்கான விடைகள் பாஸ்!

1. மின்னல் மாதிரி வந்த பாட்டுதான். ஆனா மென்மையாய் வருடி வருடி எங்கெங்கோ அழைத்துச் சென்ற பாடலை எழுதியதும் பெண் கவிஞரே. ஆண்கள், பெண்கள் எல்லோரையும் மயங்கவைத்த பாடல் என்ன பாடல்?

2. தூய தமிழில் வைரமுத்து மிரட்ட, ஏ.ஆர்.ரஹ்மானோ தன் வாத்தியங்களை கறுப்பு வெள்ளைக் காலத்துக்குக் கொண்டு செல்ல, உன்னி கிருஷ்ணனின் மேஜிக் குரலோடு மேடம் செய்த ஜாலம் காலத்திலும் அழிக்க முடியாததுதானே! குறுந்தொகையெல்லாம் விளையாடிய பாட்டு என்ன பாட்டு?

3.  முண்டாசுக் கவியின் கவிதைக்கு இசைஞானி போட்ட மெட்டு. இரண்டு வெர்ஷன்களில் வந்தாலும் இவரின் குரலில் இருந்த ஏக்கமும் கருணையும் தேன்குழல் லட்டு! பாட்டிலும் குரலிலும் சரண் அடைந்தவர்கள் அநேகர். என்ன பாட்டு இந்தப் பாட்டு?

4. படத்தின் தலைப்பு சொல்லும் காதல் மன்னனை. பாடலும் காதலில் கரையும். ஐஸ்கிரீம் குரலில் தவிக்க தவிக்க ஹரீஷ் ராகவேந்தருடன் டூயட் சேர்ந்த இந்தப் பாடல் இன்னமும் இசையமைப்பாளர் ஹாரீஸுக்கு தனி அடையாளம். என்ன பாட்டு இந்தப் பாட்டு?.

5. உடன் பாடிய பாடகர் பெயரிலும் ஸ்ரீ உண்டு. பாரதியாரின் ஒரு வரியை முதல் வரியாக்கி நா. முத்துகுமார் பாடல் படைத்தார். ஹாரிஸ் இசையில் இன்னொரு மாஸ் ஹிட் பாடல். படத்தில்தான் நிறைய மறதி. பாட்டை என்றுமே மறக்க முடியாது. மறக்காம சொல்லுங்க என்ன பாட்டுனு?

6. யுவன் இசையில் வந்த மெலடி. படத்தின் தலைப்பு ஊர் பேர் சொன்னாலும் வந்தது தெரியாமல் போன படத்தில் இப்படி ஓர் அற்புதப் பாட்டு. ஹீரோயின் அறிமுகப் பாடல்தான். கேட்டுப்பாருங்கள். மயங்க வேண்டாம் என அவர் சொன்னாலும் மயங்குவீர்கள். என்ன பாட்டு?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick