``நாங்க டப்ஸ்ம்மாஷ் ஜோடிதானுங்க!''

து டப்ஸ்மாஷ் காலம்! ஃபேஸ்புக்கைத் திறந்தாலே ஆளாளுக்கு டப்ஸ்மாஷ் போட்டுக் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதிலும், ஜோடியாக மெர்சல் காட்டும் டப்ஸ்மாஷ்களுக்கு இப்போ மவுசு அதிகம். யூ-டியூபைத் திறந்து `டப்ஸ்மாஷ் கப்பிள்ஸ் தமிழ்'னு டைப் செய்தால் வந்து விழும் வீடியோக்களில் முக்கால்வாசி இவர்கள் செய்ததுதான். செல்ஃபி கேமராவுக்கு முன்பே பக்காவாக ஆக்‌ஷனைக் காட்டும் அருண் பிரசன்னா - சஞ்சனா­ தம்பதியை போனில் பிடித்தேன்.

``இப்படியெல்லாம் எல்லா பேஜ்லேயும் ஷேர் பண்ணி யூ-டியூப் ஃபேம் ஆவோம்னுலாம் நினைச்சே பார்க்கலை! நம்மைச் சுத்தி இருக்கிறவங்களை எப்போதுமே சந்தோஷமா வெச்சுக்கணும். நம்மளால கொஞ்ச நேரம் எல்லாத்தையும் மறந்து சிலராவது சிரிச்சாங்கனா அதுதான் எங்களுக்கும் மகிழ்ச்சி. அப்பா, அம்மாவோடு சேர்ந்து பண்ற ஃபேமிலி டப்ஸ்மாஷ் எங்கள் ஸ்பெஷாலிட்டி...'' என நெகிழ்ந்தபடியே பேச ஆரம்பிக்கிறார் அருண் பிரசன்னா. பெங்களூரில் இருக்கும் பிரபல ஐ.டி. கம்பெனியில் ப்ரோஜெக்ட் மேனேஜராக வேலை பார்த்தபடி இவரும், இவரது மனைவியும் ஹாபியாக செய்வதுதான் இந்த டப்ஸ்மாஷ் சரவெடிகள்.

``போன வருஷம் ஆரம்பிச்சது இந்த விளையாட்டு. தார்மிக் லீ, மிருணாளினி டப்ஸ்மாஷ்கள்லாம் பார்த்து நாங்க ரெண்டு பேரும் விளையாட்டா சில சினிமா டயலாக்குகளுக்கு ஆக்டிங் கொடுத்து ஃபேஸ்புக்கில் போட்டுப் பார்த்தோம். அதுக்கு நிறைய கமென்ட்ஸ் வந்துச்சு. ரொம்பநாளா டச்ல இல்லாத நண்பர்கள்கூட அந்த வீடியோவைப் பார்த்துட்டுக் கூப்பிட்டு `நல்லாயிருக்கு'னு பாராட்டினாங்க. ஆனாலும், வொய்ஃபோட சேர்ந்து பண்றதால நமக்குத் தெரியாத யாராவது தப்பான கமென்ட்ஸ் பண்ணிட்டா நல்லாயிருக்காதேன்னு நினைச்சுக்கிட்டு அதுக்கு அப்புறம் கொஞ்சநாள் எந்த வீடியோவும் பண்ணவே இல்லை. வீட்டில் அப்பா, அம்மாக்கிட்ட இதைப்பற்றிப் பேசினப்போ, `யார் மனசையும் புண்படுத்தாத மாதிரி, எல்லோரையும் சந்தோஷப்படுத்துற மாதிரி வீடியோதானே... சும்மா போடுங்கப்பா'னு சொல்லி உசுப்பேத்திவிட்டாங்க. அதற்கு அப்புறமாதான் நிறைய டப்ஸ்மாஷ் பண்ண ஆரம்பிச்சோம். சில டப்ஸ்மாஷ்களை சேர்த்து ஒரு தொகுப்பாக்கி மூணு நிமிஷம் வர்ற மாதிரியான வீடியோவை ஃபேஸ்புக்கில் ஷேர் பண்ணினோம். அது செம ஹிட்டடிச்சு நிறைய பேஜ்ல ஷேர் ஆச்சு. சில பிரபலமான ஃபேஸ்புக் பக்கங்களிலும் எங்களை கான்டாக்ட் பண்ணி `ஷேர் பண்ணின வீடியோவுக்கு செம ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு. தொடர்ந்து நிறையப் பண்ணுங்க'னு சொன்னாங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick