பறக்கும் ராசாளி!

``உலகம் என்பது ஒரு புத்தகம். பயணம் செய்யாதவர்கள் அதன் ஒரு பக்கத்தை மட்டுமே இன்னமும் படித்துக்கொண்டிருக்கிறார்கள்'' என்பது பயணத்தைப் பற்றிய பிரபலமான பொன்மொழி. உலகம் முழுக்க சுற்றிப்பார்க்க நமக்கெல்லாம் ஆசை இருக்கும். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த கஸாண்ட்ரா டி பெகோல் உலகத்தையே சுற்றிவந்து அசத்திக்கொண்டிருக்கிறார்.

2015-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கி இதுவரை 181 நாடுகளுக்குப் பயணித்திருக்கிறார் இவர். Expedition196 என்ற பெயரில் உலகத்தையே சுற்றிவரத் திட்டமிட்டு தற்போது சாதனையின் விளிம்பில் இருக்கிறார். மீதமிருக்கும் 15 நாடுகளுக்கும் அடுத்த மாதத்திற்குள் பயணித்து, `உலகம் சுற்றி வந்த முதல் பெண்' என்ற சாதனையைப் படைக்கவிருக்கிறார். இது தவிர்த்து, `குறைந்த காலத்தில் உலகின் பல நாடுகளைச் சுற்றிவந்த முதல் நபர்' என்ற சாதனையையும் நிகழ்த்தவிருக்கிறார்.

பக்கத்தில் இருக்கிற ஊருக்குப் போய்ட்டு வந்தாலே கன்னாபின்னான்னு செலவாகுமேனு தலையைச் சொறிஞ்சுகிட்டே விசாரிச்சா... இவருடைய பயணச்செலவுகள் அனைத்தையும் சுற்றுலா மூலம் அமைதியை ஏற்படுத்தும் பன்னாட்டு அமைப்புதான் (International Institute for Peace Through Tourism ) செலவழிக்கிறதாம். இதுவரை இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் இவரின் இந்தப் பயணத்திற்காகச் செலவாகியுள்ளது.

தான் பயணிக்கும் நாடுகளில் குறைந்தது இரண்டு நாட்கள் தங்கி அந்நாட்டின் கலாசாரம், இடங்கள் பற்றிப் பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் கஸாண்ட்ரா. தனது கேமராவில், பயணிக்கும் நாடுகளைப் படம்பிடித்து சோஷியல் மீடியாவில் லைக்ஸ்களைக் குவிக்கும் இவர், இந்தப் பயணத்திற்காக இதுவரை 254 விமானங்களில் பயணித்திருக்கிறார்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick