டெக்மோரா | Techmora - Timepass | டைம்பாஸ்

டெக்மோரா

ப்பப் பார்த்தாலும் வாட்ஸ்அப்பைப் பார்த்துக்கிட்டு, அனுப்பின மெசேஜுக்கு புளூ டிக் வருதா இல்லையானு காத்துக்கிட்டு இருந்தோம். வாய்ஸ்-கால் வசதி வந்தது. பிறகு, ஃபிரீ வை-ஃபை கிடைக்கும்போதெல்லாம் வாய்ஸ்-கால் பண்ணி, ‘என்ன மச்சான் நல்லா இருக்கியா’னு கேட்டோம். 2ஜி நெட்டைப் பயன்படுத்துறவங்களுக்கு, இந்த வாய்ஸ்-கால்ல காலையில பேசினா, மதியம்தான் ‘குட்மார்னிங்’ கேட்கும். அந்த அளவுக்கு ஸ்லோ! பிறகு, அதுவும் அப்டேட் ஆகி, நம்ம ஆளுங்களுக்கு செட் ஆயிடுச்சு. இதுக்கு இடையில கூகுள் டுயோ, ஐ.எம்.ஓ, ஸ்கைப்னு பலபேர் வீடியோ கால் வசதிகளைக் கொடுத்துட்டாங்க. இப்போ, வாட்ஸ்-அப்பும் தன் பங்குக்கு வீடியோ கால் வசதியை அறிமுகப்படுத்துது!

சில நாட்களுக்கு முன்பு வீடியோ காலுக்கான பீட்டா வெர்ஷனை பயனாளிகளுக்கு அறிமுகப்படுத்தியது வாட்ஸ்-அப். சோதனை ஓட்டமாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த வசதி, இன்று அனைத்துப் பயனாளர்களுக்கும் மொத்தம் 180 நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ் மற்றும் விண்டோஸ் ஆகிய மூன்று இயங்கு

தளங்களிலும் இந்த வீடியோ-கால் வசதி இயங்கும். உங்கள் வாட்ஸ்-அப்பை அப்டேட் செய்துவிட்டால் போதும். செயல்முறை சிம்பிள்தான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick