``சூப்பர் ஸ்டார் ஸாரி சொன்னார்!''

`` `2.0' முதல் நாள் ஷூட்டிங்ல முதல் ஷாட் நானும் ரஜினி சாரும் தான் பெர்ஃபார்ம் பண்றோம். மொத்த யூனிட்டும் எங்களையே பார்த்துட்டு இருக்காங்க. ஷாட் முடிஞ்சதும், செம கிளாப்ஸ். ரஜினி சார் வந்து `கங்கிராட்ஸ் மா'னு சொல்றார். மொத்தம் ஆறு நாள் ஷூட். ரஜினி சார் பேசுன ஒவ்வொரு வார்த்தையும் இன்னமும் என் காதுல விழுந்துட்டே இருக்கு'' - ஆச்சர்யம் அகலாமல் பேசத் தொடங்குகிறார் மாயா. சிலம்பாட்டம், ஜிம்னாஸ்டிக், நாடகக் கலைஞர், பின்னணிப் பாடகி, சினிமா நடிகை, கிளவுன் டாக்டர்... என பயோடேட்டாவில் நிரப்புவதற்கு இடமில்லாமல் எல்லா ஏரியாவிலும் சொல்லி அடிக்கும் கில்லி மாயா.

``முதல் படம் `வானவில் வாழ்க்கை' வாய்ப்பு எப்படி கிடைச்சது?''

``ஜேம்ஸ் வசந்தன் சாரோட அசோஸியேட் எங்க வீட்டு மாடியிலதான் இருந்தார். கீழ்வீட்டுல நல்ல சத்தமாப் பாட்டு பாடிக்கிட்டு இருந்தேன். எங்க வீட்டுக்கு வந்துட்டாரு, `சாரி சார் இனிமே இப்படி பண்ணமாட்டேன்'னு தயக்கமா சொன்னேன். `நான் அதுக்கு வரலமா... ஜேம்ஸ் வசந்தன் சார் ஒரு படம் பண்றாங்க, போயி பார்க்க முடியுமா'னு கேட்டார். சினிமா கேரியர் ஸ்டார்ட் ஆயிடுச்சு!''

`` `2.0' அனுபவங்கள்?''

``இவ்வளவு சீக்கிரம் இந்த வாய்ப்பு கிடைக்கும்னு நினைக்கலை. ஒரு மேஜிக் மாதிரி இருக்கு. இவ்வளவு பெரிய புராஜெக்ட்... நம்மளால எந்தத் தப்பும் நடந்துடக்கூடாதுனு பயம் இருந்துகிட்டே இருந்துச்சு. ஷங்கர் சாரோடா அசிஸ்டன்ட்ஸ் எல்லாரும் ரொம்ப சப்போர்ட்டிவா இருப்பாங்க. அவங்க சொல்றதை, ஒரு 700 தடவையாவது ரிகர்சல் பண்ணிப்பேன். தூக்கத்துல தட்டி எழுப்பிக் கேட்டாக்கூட, படத்துல வர்ற டயலாக் சொல்லிடுவேன். அந்த அளவுக்கு தான் தயார்ப்படுத்திக்கிட்டேன். அந்த ஆறு நாளும் என்னால மறக்கவே முடியாது!''

``சூப்பர் ஸ்டார் என்ன சொன்னார்?''

``ஷூட் டைம்ல, `சார் உங்க கூட ஒரு போட்டோ எடுத்துக்க முடியுமா'ன்னு கேட்டேன். எனக்கு மொத்தமே ஆறு நாள் தான் ஷூட்டிங். கடைசி நாள்ல ரஜினி சாருக்கு உடம்பு சரியில்லைனு சீக்கிரமே போயிட்டார். மறுநாள் எனக்கு ஷூட் இல்லை. ஆனா நான் ஸ்பாட்டுக்குப் போயிருந்தேன். தூரத்துல என்னைப் பார்த்துட்டுக் கூப்பிட்டார். `ஸாரிம்மா.. ரொம்ப ஸாரி'னு சொன்னவர், கேரவனுக்குக் கூப்பிட்டு, என்னோட கேரியர் பத்தியெல்லாம் விசாரிச்சார். என்னோட ஃப்ரெண்ட் என்னை யும் அவரையும் போட்டோ எடுத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick