எம்.ஆர்.ராதா மாதிரி நடிக்க ஆசை!

``மதுரைதான் சொந்த ஊரு. கல்யாண போட்டோகிராபரா இருந்தேன். சினிமா ஆசையில கேமராமேன் ஆகணும்னு இருந்தப்போ இயக்குநர் பாலா அண்ணன்தான் என்னை சினிமால சேர்த்து விட்டார். நம்ம எல்லோருக்குள்ளயும் ஒரு நடிகன் இருப்பான். அந்த நடிகனை வெளிக்கொண்டு வர்றதுக்கு ஒரு ஆள் வேணும். எனக்குள்ள இருந்த நடிகனை சுசீந்திரன்தான் கண்டுபிடிச்சு கொண்டு வந்தாரு. சுசீந்தரன், சீனு ராமசாமின்னு என் வளர்ச்சி என்னோட நண்பர்களால உருவானது. `நான் என் நண்பர்களால் வளர்ந்தவன்'னு சொல்றதுல எனக்கு எப்போதுமே சந்தோஷம்தான்'' -அமைதியாக ஆரம்பிக்கிறார் திரையில் அதகளப்படுத்தும் அருள் தாஸ்.

``கேமராவுக்குப் பின்னால இருந்து நடிகனா முன்னால வந்தப்போ எப்படி இருந்துச்சு?''

``கண்டிப்பா பதட்டம் இருந்துச்சு. என்னதான் திரைத்துறை பழக்கப்பட்ட  ஒண்ணுனாலும் நடிப்பு எனக்கு புதுசாத்தான் இருந்துச்சு. சுசீந்திரன் எனக்கு கூடப்பொறந்த தம்பி மாதிரி. `நான் மகான் அல்ல' டீம்ல எல்லோருமே பழக்கப்பட்டவங்க அப்படிங்கிறதால குட்டி நடேசன் கேரக்டரை ஜாலியா பண்ணிட்டேன்.''

``வில்லன், குணச்சித்திர கேரக்டர்... எப்படி இருக்கு வீட்டுல ரெஸ்பான்ஸ்?''

``ஹாஹா... `தடையறத் தாக்க', `தாக்க தாக்க'லாம் கொஞ்சம் கொடூரமான கேரக்டரா இருக்கும். `தாக்க தாக்க' படத்துல புரோக்கரா நடிச்சிருப்பேன். இதெல்லாம் பார்த்துட்டு வீட்டுல, `என்னங்க, இப்படில்லாம் ஏன் பண்றீங்க'ன்னு கேட்டாங்க. `எல்லாம் நடிப்புதான்மா'ன்னு சொல்லி புரியவைப்பேன். `சூதுகவ்வும்' ரவுடி டாக்டர், `தங்கமீன்கள்'ல பாசிட்டிவ் கேரக்டர் இதெல்லாம் பார்க்குறப்ப ஜாலியாகிடுவாங்க.''

``ஒரு ஒளிப்பதிவாளரா, உங்க பார்வையில அழகான நடிகைன்னு யாரைச் சொல்லுவீங்க?''

``ஒளிப்பதிவாளரா சொல்லணும்னா சில்க் ஸ்மிதாதான் அவ்வளவு அழகு! என்னதான் வெள்ளையா இருந்தாலும் சினிமா ஃப்ரேம்ல ரொம்ப நேரம் ரசிக்க முடியாது. சில்க் ஸ்மிதாவோட கலர் எப்பவுமே அவங்களுக்கு ரொம்ப ப்ளஸ்னு தோணும். பாலுமகேந்திரா சார், அசோக்குமார் சார் மாதிரியான ஜாம்பவான்கள் எல்லாம் நடிக்க வெச்சுருக்காங்கன்னா சும்மாவா? `அன்று பெய்த மழையில்' படத்துல எல்லாம் சில்க் ஸ்மிதா சான்ஸே இல்லை.'''

``விஜய் சேதுபதிக்கும் அருள்தாஸுக்குமான நட்பு பற்றி..?''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick