2Gயை மிஞ்சிய 2K!

2G பிரச்னைக்குப் பிறகு இந்தியாவை அதிகமாகப் புரட்டிப் போட்டது, மக்கள் அங்க இங்கன்னு அலைஞ்சு புரட்டி வெச்ச 2K பிரச்னைதான். அதாங்க ரெண்டாயிரம் ரூபாய் பிரச்னை. நேத்து வரைக்கும் ரெண்டாயிரம்னு சொல்லிக்கிட்டு இருந்தவனை, இன்னைக்கு பிம்பிளிக்கி பிலாப்பின்னு புலம்ப வெச்சுட்டார் மோடிஜி. எடுத்ததுக்கெல்லாம் அறிக்கை விடும் நம் பிரபலங்கள் 2K பிரச்னை பத்தி `அதாரு உதாரு' சேனலின், `வாழ்வா? சாவா?' நிகழ்ச்சியில் என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாமா? வாங்க!

தமிழிசை :     ``மாண்புமிகு, மதிப்பிற்குரிய, மரியாதைக்குரிய, பாசத்திற்குரிய ... (அதற்குள் தொண்டர் ஒருவர் மைக்கைக் கையால் மறைத்து, ``மேடம், சீக்கிரம் பேசி முடிங்க... இல்லைனா அதுக்குள்ள ரெண்டாயிரம் ரூபாயும் செல்லாதுன்னு சொல்லிடுவாங்க)

(தமிழிசை பதற்றத்துடன்) ``ஆகவே அ.தி.மு.க, தி.மு.க-வுக்கு ஒரே மாற்று ரெண்டாயிரம்தான், மன்னிக்கவும், பா.ஜ.க-தான்!''

ராமதாஸ் :    ``மாற்றம் முன்னேற்றம்னு நாங்க சொன்னதைத்தான் பா.ஜ.க காப்பி அடிச்சுட்டாங்க. ரெண்டாயிரம் ரூபாயை மாற்ற அடுத்த தேர்தலில் எங்கள் மாற்றம், முன்னேற்றத்திற்கு வாக்களியுங்கள்.''

திருநாவுக்கரசர் :    ``பெரியவர்களாகச் சேர்ந்து நடத்தும் நல்ல நாடகம் இது. இவர் ஆட்சிக்கு வரும் வரை ரெண்டாயிரத்தை மாத்தாம வச்சிருக்கணுமாம்... நான் அடுத்த கட்சி மாறுறதுக்குள்ள ரெண்டாயிரம் ரூபாய் இருக்கக்கூடாது பாத்துக்கோங்க!''

குஷ்பு :    ``இதை நான் வழி மொழிகிறேன். இதற்குத்தான் இளம் தலைவர் ராகுல்ஜியை பிரதமராக்க நான் அன்றே மக்களிடம் கூறினேன்.''

ராமதாஸ் :    ``ரெண்டாயிரம் ரூபாயைப் புகுத்தியது ஒரு சில்லறைத்தனமான விவகாரம்" 

ராகுல்:  
   (தலையை ஆட்டியவாறு) ``நானும் ரெண்டாயிரம் ரூபாய் எடுத்துக்கிட்டு கடைத்தெருவுக்குப் போனேன். ஒரு பய கண்டுக்கலை!''

தமிழிசை :    ``உங்களையா, ரூபாயையா ராகுல் ஜி?''

ராகுல் :    ``மேடம், பாஜக குசும்பு உங்களை விட்டுப் போகலியே, நான் சொன்னது சில்லறையைத்தான்!''

அப்பொழுது ``ஐயகோ...'' என்று ஒரு குரல். எல்லோரும் பீதியுடன் திரும்பிப் பார்க்க, கருணாநிதி துண்டை வாயில் வைத்து அமுக்கியவாறு துக்கம் பீறிட வருகிறார்.

கருணாநிதி :    ``ஒவ்வொரு இந்தியனையும் சலவை நோட்டால் இப்படி  மூளைச்சலவை செய்துவிட்டார்களே! விடமாட்டோம், கழகத்தின் சார்பாக நாங்கள் கறுப்புக் கொடிப் போராட்டம் நடத்துவோம்!''

தமிழிசை : 
   ``மதிப்பிற்குரிய மோடி அவர்களின் ஆட்சியில் இனிக் கறுப்பு என்பதே இருக்கக்கூடாது என்றுதான் கறுப்புப் பணத்தை ஒழிக்கிறோம். நீங்கள் எப்படி கறுப்புக் கொடி பிடிப்பீர்கள்?''

கருணாநிதி :    ``அப்படியென்றால் வெள்ளைக்கொடி பிடிப்போம்" என்று சொல்ல, அருகில் இருக்கும் ஸ்டாலின், ``ஐயோ, காரியத்தைக் கெடுத்தீங்க. வெள்ளைக்கொடி பிடிச்சா பா.ஜ.கவோட கூட்டணினு அர்த்தம்'' என்று கிசுகிசுக்க உஷாராகிறார் கருணாநிதி.

அம்பானி :    ``டிசம்பர் 30-தான் கடைசி.''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்