கதை விடுறாங்க!

ண்பர்களோடு சேர்ந்து கோவா செல்லத் திட்டமிட்ட ஷ்யாம், அடுத்த வாரத்தில்... - இந்த ஒரு வரியை டெவலப் செய்து, டைம்பாஸ் ரசிகர்கள் எழுதிய குட்டிக் கதைகள் இவை.

ஹரி : நண்பர்களோடு கோவா செல்லத் திட்டமிட்ட ஷ்யாம், அடுத்த வாரத்திலும் `திட்டம்' மட்டும் போட்டான். இதெல்லாம் நமக்குப் புதுசா பாஸ்?

காளி : 2,000 ரூபாய்க்கு சில்லறை மாற்ற முடியாமல் சிக்கிச் சீரழிந்து, ஏ.டி.எம்-மைச் சுற்றிச் சுற்றி வந்து கதறினான். BASED ON REAL STORY!

மாரீஷ் : அடுத்த வாரத்தில் ஊருக்குத் திரும்ப வந்துவிடலாம் என்று நினைத்தான். அங்கு சென்றபின் அங்கிருக்கும் அழகான பெண்ணைத் திருமணம்செய்து கோவாவில் செட்டிலாக ப்ளான் போட்டான். அவனுடைய நண்பர்களும் இதற்குச் சம்மதித்தார்கள். ஆனால், அவனுடைய அம்மா ஒரு வாளித் தண்ணீரை அவன் முகத்தில் ஊற்றி `` `கோவா' படத்தை நைட் டி.வி-ல பார்த்துட்டு இன்னும் தூங்குது பாரு... எருமை மாடு'' என எழுப்பிவிட்டார்.

இம்ரான் இம்மு : தனது நண்பர்களைத் தொடர்பு கொண்டபோது அவர்கள் எல்லாம் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்ததால், ப்ளானை கேன்சல் செய்துவிட்டு வீட்டில் குப்புறப்படுத்துத் தூங்கினான். இதோட 23-வது தடவையா கோவா ப்ளான் கேன்சல் ஆகிறது!

அயன் கணேஷ் : கோவாவில் மதுவிலக்கு என்று அறிவித்தார்கள். `வட போச்சே' என நினைத்தபடி பாண்டிச்சேரிக்கு வண்டியைக் கிளப்பினார்கள்.

வினோத் : வீட்டில் செலவுக்குக் காசு கேட்டான். ஒருமணி நேரம் அவனைக் கழுவி ஊற்றிவிட்டு, பணத்தை 500 ரூபாய் நோட்டுகளாகக் கொடுத்தார்கள். `இதை எப்போ சில்லறை மாற்றி... எப்போ நான் கோவா போறது' என நொந்துகொண்ட ஷ்யாம், பக்கத்திலிருந்த டாஸ்மாக் பக்கமாக ஒதுங்கினான்!

சண்முக சுந்தரம் :
அவனுடைய முதலாளி ஐந்து லட்சம் ரூபாய் கறுப்புப் பணத்தை அவன் அக்கவுன்ட்டுக்கு மாற்றிவிட, அதைக்கொண்டு நண்பர்களுடன் ஆஸ்திரேலியாவுக்குப் பறந்தான்!
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick