எப்படி இருந்த நான்...

சின்ன வயசுல நமக்குக் கொஞ்சம்கூட பிடிக்காம இருந்த பல விஷயங்கள் வயசாக வயசாக ரொம்பப் பிடிச்சதா மாறியிருக்கும். நம்ம ஹிஸ்டரி புக்கைக் கொஞ்சமா புரட்டிப் பாருங்களேன்... நம்ம வாழ்க்கை நம்மளை எப்படியெல்லாம் புரட்டிப் போட்டுருக்குனு தெரிஞ்சிக்கலாம்!

சின்ன வயசுல ஹீரோவா நடிச்சது யாரா இருந்தாலும் நமக்கு உடனே பிடிச்சிடும். ராமராஜன்ல இருந்து `மண்வாசனை' பாண்டியன் வரைக்கும் எல்லோரையும் ஹீரோவா நடிச்ச ஒரே காரணத்துக்காக நாம் லைக் பண்ணியிருப்போம். ஆனா, வளர வளர படத்துல உள்ள குணச்சித்திர நடிகர்கள்ல இருந்து வில்லன் வரைக்கும் யாராவது நல்லா நடிச்சிருந்தா, உடனே அவரையும் ரசிக்க ஆரம்பிச்சிடுவோம். `மங்காத்தா' மஹாதேவ்லாம் பெரிய ஆள் ஆனது அப்படித்தானே!

சுட்டிப்பையனா இருக்கிறப்போ கன்னத்துல யாராவது குட்டியா முத்தம் கொடுத்தா போதும் உடனே `ச்சீ எச்சி'னு சொல்லிட்டு ஓடிடுவோம். வயசு ஆக ஆகத்தான் கன்னத்துல இல்லை. கைலகூட யாரும் முத்தம் கொடுக்க மாட்றாங்களேனு நினைச்சு நினைச்சு வருத்தப்படுவோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick