பெண்மைக்குப் பொய் அழகு!

`இதெல்லாம் பொய்'னு ஈஸியா மத்தவங்க கண்டுபிடிச்சிடுவாங்க என்று தெரிஞ்சாலும், பொண்ணுங்களால அதைச் சொல்லாம இருக்க முடியாது. அப்படியான பெண்களின் ஃபேவரைட் பொய்களும்... அதைக் கேட்கும் பசங்களின் ஜாலி மைண்ட் வாய்ஸ்களும்... இதோ!

அய்யய்யோ... கால் எதுவும் பண்ணிடாத... இது என் போன் இல்லை. உண்மையச் சொல்லணும்னா, என்கிட்ட போனே இல்லை. இது அம்மா போன். மாட்டினேன்... சங்குதான். #ஓ ஆன்ட்டி போனா? ஓகே ஓகே!

கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காத. உன்கிட்டே பேசிட்டே இருக்கணும்போல இருக்கு. கொஞ்சம் நெட்கார்ட் போட்டுவிடுறியா? #லாபமோ நஷ்டமோ நான் உன் மொபைலுக்கு ரீசார்ஜ் பண்ணி விடலாம். உன் அம்மா போனுக்கு நான் எப்படி? ச்சீ... போங்கள்!

அது என்னானே தெரியலை... பசங்கன்னாலே எனக்குப் பயம். நான் பேசுற ஃப்ர்ஸ்ட் பையன் நீதான். #ஏம்மா நீ அண்ணன் தம்பி கூடல்லாம் பொறக்கலையாமா? அவங்கல்லாம் பசங்க இல்லையாம்மா..?

ஒருமணி நேரமா கண்ணாடி முன்னாடி நின்னாலும் அப்போலாம் சொல்லாம கரெக்டா செருப்பு போடுறப்போ, `அம்மா இன்னைக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு. நான் வர லேட்டாகும்... தேடாதே'னு சொல்றது. #நல்ல நாள்லேயே க்ளாஸுக்குப் போக மாட்டேள்... இதுல ஸ்பெஷல் கிளாஸ் வேறயா? நல்லா வருவீங்கம்மா!

ஐயோ... எனக்கு ப்யூட்டி பார்லர்னாலே அலர்ஜி. த்ரெட்டிங்கூட பண்ண மாட்டேன்... ப்யூட்டி பார்லர் பக்கம் போறதைப் பார்த்தா எங்கப்பா கொன்னே போட்ருவாரு. #உடம்புக்குக் கடலை மாவு, முகத்துக்குப் பயித்த மாவு, தலைக்கு சீயக்காய் இதையும் சேர்த்துக்கலாமே செல்லம். ஐஸ்வர்யா ராய் டயலாக். செம்...மயா ரீச் ஆவும்.

நைட்டோட நைட்டா ஃபுல் புக்கையும் அப்படியே கரைச்சுக் குடிச்சுட்டு (மொட்ட மனப்பாடம்) எக்ஸாமுக்கு வந்து, `ஏய் படிச்சிட்டியாடி'னு  யாராவது கேட்டா `அதை ஏன் கேட்கிற... சுத்தமா ஒண்ணுமே படிக்கலை. நேத்துனு பார்த்து 9 மணிக்கெல்லாம் தூங்கிட்டேன்'னு அளந்து விடுறது. #வாட்ஸ் அப்ல லாஸ்ட் சீன் ரெண்டரை மணினு காட்டுச்சேம்மா... ஏம்மா முழுப் பூசணிக்காயை லெமன் டீயால மறைக்கிறே?

`என்னடி அவன் நீ எங்கே போனாலும் பின்னாடியே வர்றான். `ஈ'னு சிரிக்கிறான். என்ன லவ்வா'னு கேட்டால், `ச்சே... ச்சே... அதெல்லாம் ஒண்ணுமில்லை... அவன்தான் என்னைப் பார்க்கிறான். நான் இல்லை'னு ஃபிலிம் காட்டுறது. #அப்போ நான் என் கண்ணால கண்ட காட்சியெல்லாம் பொய்யா லதா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick