ராத்திரி ராஜாக்கள்! | DJ Artist Prasanth Interview - Timepass | டைம்பாஸ்

ராத்திரி ராஜாக்கள்!

த்துக்கு பத்து பார்ட்டி ஹாலாக இருந்தாலும் சரி, பத்தாயிரம் பேருக்கு மேல இருக்கும் மைதானமாக இருந்தாலும் சரி, ரசிகர்களை அலுப்பு தட்டவிடாமல் தொடர்ந்து உற்சாகப்படுத்தும் கலைஞர்கள் இந்த டி.ஜே வாலாக்கள். முன்னணி டி.ஜே-க்களின் பெர்சனல் பக்கங்கள் இவை!

‘`அது எல்லோருக்குமான கொண்டாட்ட மனநிலை. டி.ஜே சந்தோஷ மனநிலையில இருந்தாதான் அங்கே கொண்டாட்டத்துல இருக்குறவங்களுக்கு அதே உற்சாகத்தைக் கடத்த  முடியும். எப்பவும் நாம தேர்ந்தெடுக்குற இசை அவர்களுக்கு அலுப்பை கொடுத்துவிடக்கூடாதுன்னு கவனமா இருப்பேன்’’ - அதே பார்ட்டி உற்சாகம் குறையாமல் பேச ஆரம்பிக்கிறார் பிரஷாந்த். சென்னையின் முன்னணி டி.ஜே-க்களில் ஒருவர், `சென்னையின் எஃப்சி' கால்பந்து அணியின் அதிகாரபூர்வமான டி.ஜே!

``காரைக்குடியில பிறந்து திருச்சியில இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, பொழப்பு தேடலாம்னு 2006-ல சென்னை வந்த பையன் நான். முதன் முதலா சென்னையில ஒரு கிளப்புக்கு போகலாம்னு ஆசை. ஆனா, காசு இல்லை. பணம் சேர்த்துட்டு கிளப்புக்குப் போனா இப்படியும் உலகம் இருக்குன்னு எனக்கு தெரிஞ்சது. இந்த டி.ஜே வேலை எப்படி பண்றாங்கன்னு பார்க்குறதுக்காகவே கிளப்புக்கு அடிக்கடி போக ஆரம்பிச்சேன். அங்கே இருக்கும் டி.ஜே-க்களோட பழகுற வாய்ப்பு கிடைச்சது. பார்ட் டைமா எனக்கு ஒருவர் கத்துக்கொடுத்தாரு.''

``டி.ஜே-க்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத பின்னணி. எப்படி உங்கள தயார்படுத்திக்கிட்டீங்க?’’

``ஆரம்பத்துல ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. நடை, உடை, பாவனை எல்லாத்தையும் மாத்துறதுக்கு கொஞ்சம் டைம் எடுத்துச்சு. இசையில் ஆர்வம் இருந்தாலும், தமிழ்ப் பாட்டு தவிர வேற எதுவும் நான் கேட்டது இல்ல. இன்டர்நெட் அவ்வளவு வளர்ச்சி பெறாத காலகட்டத்துல தேடித் தேடி கேட்க ஆரம்பிச்சேன். இன்னமும் நான் கத்துகிட்டுதான் இருக்கேன்.''

‘`சென்னையின் எஃப்சி-க்கு டி.ஜே வாய்ப்பு எப்படிக் கிடைச்சது?’’

``நான் பிளே பண்றே `டப்ளின் பார்ட்டி'க்கு வந்திருந்த ஒருத்தர்தான் `உன்னோட ஸ்டைல் நல்லா இருக்கு. எங்களுக்கு டி.ஜே பண்ண முடியுமா?'னு கேட்டார். `சரி'னு சம்மதிச்சேன். அதான் சென்னையின் எஃப்.சி டி.ஜே!''

‘`எப்பவுமே பார்ட்டி மியூசிக்... ஜாலியான வாழ்க்கைதானே இது?’’


``வெளில இருந்து பார்க்கும்போது அப்படித்தான் தெரியும். கிளப்புக்கு எப்போதாவது வரும் தெரிந்த நண்பர்களோ உறவினர்களோகூட ஒரு மாதிரி, `என்னடா கிளப்ல வேலை பார்த்துக்கிடு இருக்க!'னு கேட்பாங்க. அதனால இதை ஜாலியான வாழ்க்கைனு சொல்லிடமுடியாது பாஸ்!''

‘`உங்களோட ஸ்டைல் பத்தி பிரபலங்கள் என்ன சொல்லியிருக்காங்க?”


``கமல் சாரோட பிறந்த நாளுக்குத் தொடர்ச்சியா மூணு வருடமும் நான்தான் டி.ஜே பண்ணுனேன். சூர்யா - ஜோதிகா வீட்டு ஃபங்ஷன்ல பிளே பண்ணிருக்கேன். வெங்கட்பிரபு சார் அவ்வளவு இசைப்பிரியர், அவருக்கு ஹிப்ஹாப் ரொம்ப இஷ்டம். ''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick