வந்தாச்சு மலர் டீச்சர் தங்கச்சி!

லர் டீச்சர் தங்கச்சியும் இப்போ நடிக்க வந்தாச்சு. ‘காரா’ குறும்படத்தின் டீஸர் வெளியானதும் அதில் நடித்திருக்கும் சாய் பல்லவியின் தங்கை பூஜாவிற்கு வாழ்த்துகள் சொன்னோம்.

“இப்போதான் செகண்ட் இயர் ஆங்கில இலக்கியம் படிக்கிறேன். அக்கா மாதிரி டாக்டர் ஆகணும்ங்கிற ஆசையெல்லாம் இல்லை (என்னது! டாக்டரா? டீச்சர் இல்லியா?) மேற்படிப்பு முடிச்சுட்டு காலேஜ் புரொஃபஸரா வேலை பார்க்கணும். ‘சாய் பல்லவி காலேஜ் ப்ரொஃபஸரா நடிச்சாங்க. நீ உண்மையாவே காலேஜ் ப்ரொஃபஸரா’ன்னு ஃப்ரெண்ட்ஸ் என்னைக் கலாய்ப்பாங்க தெரியுமா?” - சிரிப்போடு பேச ஆரம்பிக்கிறார் பூஜா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick