சினிமால்

ன் படத்தில் நடிக்கும் எந்த ஹீரோவையும் ஹீரோயினையும் பெரிதாகப் புகழவோ, பாராட்டவோ மாட்டார் கே.வி.ஆனந்த். முதல் முறையாக ‘கவண்’ படத்தில் நடித்து வரும் மடோன்னா செபாஸ்டினைப் புகழ்ந்து தள்ளுகிறாராம். வெளியிலும் பல இடங்களில் மடோனாவின் நடிப்பைப் பற்றி சிலாகித்துப் பேசுகிறாராம். `இவரா இப்படி?' எனப் பலரும் ஆச்சர்யத்தில் உறைந்து போயிருக்கிறார்கள். மாற்றம் ஒன்றுதான் மாறாதது!

மோகன்லால் நடித்த படங்களை தமிழ் உட்பட இந்திய மொழிகளில் ரீமேக் செய்ய நிறைய பேர் ஆர்வம் காட்டுகிறார்கள். சமீபத்தில் அவர் நடித்த `ஒப்பம்', `புலிமுருகன்' படங்களை ரீமேக் செய்யாமல் டப் செய்து தமிழ், தெலுங்கில் வெளியிட ஆர்வம் காட்டுகிறாராம் மோகன்லால். தமிழ், தெலுங்கு தனக்குப் பரிச்சயம் என்பதாலும், தனது குரலும் எல்லோருக்கும் பரிச்சயம் என்பதாலும், அவரே டப்பிங் பேசவும் முடிவெடுத்துள்ளாராம். தமிழ் ஹீரோக்கள் கவனிக்க!

`யாமிருக்க பயமே', `கவலை வேண்டாம்' படங்களை இயக்கிய டி.கே, டாப் டிரெண்டில் இருக்கும் நயன்தாராவை அணுகி நாயகியை மையப்படுத்திய கதை ஒன்றைச் சொல்லி அசத்திவிட்டாராம். நயன்தாரா ஓகே சொன்னதால், முழு வீச்சில் பட வேலைகளில் இறங்கிவிட்டாராம். மாயா மாயா, எல்லாம் சாயா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick