ஆஃப் த ரெக்கார்டு! | Cinema gossips - Timepass | டைம்பாஸ்

ஆஃப் த ரெக்கார்டு!

கைது செய்யப்பட்ட மன்னர் நிறுவனத்தின் மூன்றெழுத்து நபரால் பல நடிகர், நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர்கள் கலக்கத்தில் இருக்கிறார்களாம். போலீஸ் விசாரணையில் எங்கே தன் பெயரை இழுத்துவிட்டுவிடுவாரோ என அஞ்சி நடுங்குகிறார்களாம்.

விலங்கு படத்தின் தெலுங்கு பதிப்புக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறாராம் ‘பிரகாச’ நடிகர். பேட்டி, இசை வெளியீடு என எல்லாம் அங்கேயே நடப்பதால் தமிழ் வினியோகஸ்தர்கள் கடுப்பில் இருக்கிறார்களாம்.

‘சைக்கோ’ என்று சொல்லித் திட்டி டிரெண்ட் செய்யும் அளவுக்கு ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட இனிஷியல் பிரகாசத்தை அம்மா, மாமா, மனைவி எனக் குடும்பத்திலும் சரமாரியாகத் திட்டுகிறார்களாம். `உன் வேலையை மட்டும் பார்' எனச் சொல்லி காய்ச்சி விட்டார்களாம்.

‘கபடி’ இயக்குநர், அடுத்து இயக்கும் ‘கபடி பார்ட் 2’  படத்துக்கு ‘அட்டகத்தி’யை நாயகியாக ஒப்பந்தம் செய்தாராம். ஒரு படத்தில் அவர் குழந்தைக்கு அம்மாவாக நடித்ததை அறிந்து ஏனோ அவரை நீக்கி விட்டாராம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick